அசுர பலம் பொருந்திய அமெரிக்க ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஆட்டிப் பார்த்த ஒருவர், அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை சமரசமின்றி மேற்கொள்ளும் ஒருவருக்கு தலைவராக இருப்பதில் வியப்பில்லை.
பேரா. சுப. உதயகுமாரன் அவர்கள், தான் தலைவராக வரித்துக் கொண்ட மால்கம் எக்ஸ்சைப் பற்றி எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
நான் கொண்டிருப்பது போன்ற நம்பிக்கைகள், என்னுடைய குணம், நான் நம்புவதன்பால் காட்டுகிற அர்ப்பணிப்பு இவற்றை வைத்துப் பார்த்தால், நான் மற்றவர்களைப் போல் முதுமை அடைந்து அதற்குப் பிறகே மரணமடைவேன் எனக் கூற முடியாது.