மதங்கள் நிறுவனமயமான பின், பகுத்தறிவை அது பின்னுக்குத்தள்ளியது. அறிஞர்கள் மதங்களுக்கு எதிராக நின்றனர். விஞ்ஞான யுகம் பிறக்கும் போது, மதங்களின் மூட நம்பிக்கைகளுக்கு அது சாவுமணி அடித்தது.
அதேசமயம், அறிவியல் நிறுவனமாகும் போது, முதலாளிகளின் உடைமைப் பொருளாக அறிவியல் மாறுவதையும் மறுப்பதற்கில்லை. அனைத்து அறிவுத்துறைகளிலும் மேற்கத்திய நாடுகளை அணுகும் போக்கு தற்போது இருந்து வருகிறது. அந்தப் பின்னணியிலேயே மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற பொதுப்புத்தியும் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது.
இப்படி அறிவியலுக்கு எதிராக மதங்களை கட்டமைக்கும் போது, அந்தச் சமன்பாடு இஸ்லாத்திற்கு பொருந்தி வருவது கிடையாது என்பதை பேராசிரியர் அனஸ் விரிவாக ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.