மனிதனின் (இருபாலரின்) மீள்உருவாக்கம் நடைபெற இருக்கின்ற மறுமை மீதான நம்பிக்கை ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
அல்லாஹ் தனது எல்லாச் செயல்களையும் கவனிக்கின்றான், மறுமை நாளில் செயல்கள் அனைத்திற்கும் கணக்கு கொடுக்க வேண்டும் என அவனுக்குத் தெரியும். ஆகவே, அவனது/அவளது தொடர்புகள், நடத்தைகள், ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் அமையும். அல்லாஹ்வின் தண்டனைக்கும், கோபத்திற்கும் உள்ளாகும் செயல்களில் இருந்து அவன்/அவள் விலகி இருப்பர். மறுமையை அஞ்சக்கூடியவர்கள் அனைத்து தருணங்களிலும் தங்களை மீளாய்வு செய்து கொண்டே இருப்பார்கள்.
இதுபோன்ற உணர்வுகள், மீளாய்வுதான் மனிதனின் தொடரும் பயணத்தில் வெற்றி பெறுவதற்கு துணை நிற்கும். மனிதர்களின் தொடரும் பயணத்தில் வெற்றி பெற இந்நூல் அணுவளவேனும் பயன்படும்.
Title: தொடரும் பயணங்கள்
Author: ஜெ. முஹம்மது நாஸிம்
Category: கட்டுரை