தொழுகை என்பது வெறுமனே ஓர் ஆன்மிக நிலைப்பட்ட சடங்கு என்ற புரிதலே பெரும்பாலான முஸ்லிம்களிடம் உள்ளது. ஒரு முஸ்லிம் ஐந்து நேரம் தொழ வேண்டும் என இஸ்லாம் திட்டவட்டமாக வரையறை செய்துள்ளது.
சடங்கு போன்ற நிகழ்வொன்றிற்கு இஸ்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
இல்லையெனில், முஸ்லிம்களின் புரிதலில் குறை உள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு விடையாக உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் இந்த நூலில், தொழுகையின் தனிமனித, சமூக, அரசியல், பொருளாதார பரிமாணங்களை விளக்கி இருக்கிறார்.
Title: தொழுகை பயிற்சி ஒழுங்கும் சமூக பரிமாணமும்
Author: எம். ஏ. எம். மன்ஸூர் நளீமி
Category: கட்டுரை