தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், 1736-1874

150

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் 1736-1874

இந்த நூல் ஆனந்தரங்கப் பிள்ளை, ரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை, வீராநாயக்கர் மற்றும் முத்து விஜயத் திருவேங்கடம் பிள்ளை, ஆகிய நால்வர் புதுச்சேரியில் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் பற்றி விரிவாக அலசுகிறது. இஞ்ஞாசி, சின்னப்பன், பரஞ்சிமுத்து, இராயநாயக்கன் மற்றும் குருபாதம் நாட்டையர் ஆகிய ஐந்து தரங்கம்பாடி உபதேசியார்களின் நாட்குறிப்புகள். திருநெல்வேலியில் உபதேசியார் சவரிராயப் பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி விவரிக்கிறது. இவர்கள் தினசரி நிகழ்ந்த செயல்கள், செய்திகள், மற்றும் இதர விவரங்களை தமிழ் உரைநடையில் குறிப்பிடுகிறார்கள். பிறமொழிக் கலப்புச் சொற்களுடன் உரைநடைத் தமிழ் வளர்ந்துள்ளது. எழுத்துமொழி (செந்தமிழும்), வாய்மொழி (கொடுந்தமிழும்) சேர்ந்தே உரைநடை இவ்வாறு வளர்ந்தது சிறப்பாகும். இந்த நாட்குறிப்புகளின் வண்ணமும் வனப்பும் எவ்வாறு உள்ளது என்றும் நாட்குறிப்புகளின் மொழியியல், தமிழ் உரைநடை வளர்ச்சி, அதன் பங்கு மற்றும் முக்கியத்துவத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது.

Additional information

Weight0.250 kg