உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது?
ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் X. வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட அடிமை கறுப்பர்கள்தான். ஆனால் அந்தக் கறுப்பர்களை மனித உயிர்களாகக்கூட அங்கீகரிக்க, அமெரிக்க வெள்ளையர்கள் தயாரில்லை. இன்றளவும் இதுதான் அங்கு நிலை.
அலெக்ஸ் ஹேலி தன்னுடைய மூதாதையர்களின் பூர்வீகம் தேடி ஆஃப்ரிக்காவில் அலைந்து திரிந்து இறுதியில் கண்டடைந்ததுதான் இந்த ‘வேர்கள்’.