வேளாண் பொருட்கள் :
மனித இனம் நாடோடியாக வாழ்ந்து, வேளாண்மை மேற்கொண்டபோதுதான் நிலையான வாழ்க்கை அமைத்துக் கொண்டது. அக்காலத்தில் பண்பாடு தோன்றியது. பயிர் செய்ய வேளாண்மைப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதன் ஏர்க்கலப்பை, செக்கு, மாட்டுவண்டி போன்றவற்றைப் பயன்படுத்தினான். நாட்டுப்புறத் தொழில்நுட்பம் என்ற வகையில் இவற்றைக் குறிப்பிடலாம். விவசாயத்தை மேற்கொண்ட மனிதன் நெல்லைப் பாதுகாக்கப் பத்தாயம், குதிர் போன்றவற்றைப் பயன்படுத்தினான். இந்தப் பத்தாயம் என்பது வேப்பமரம், பூவரசு, மாமரம் முதலியவற்றால் தயார் செய்யப்படுகிறது. இந்தப்பத்தாய வடிவமைப்பு, செவ்வக அடுக்கைக் கொண்டது. சிறிய சிறிய செவ்வக அடுக்குகளாக இருக்கும். அடுக்கிற்கு மேல் பகுதியில் சதுர வடிவிலே துளை இருக்கும். அதன் வழியே நெல்லைக் கொட்டிப் பாதுகாப்பர். உணவுக்குப் பயன்படும் நெல் மட்டுமே இதில் வைக்கப்படுகிறது.சோழவளநாடு காவேரிப் பாசனத்தில் கரைபுரண்டு ஓடி நெல் வளத்தில் வற்றாது உயரத்தில் இருந்தபோது உயர்குடியில்வாழ்ந்த ஜமீன்தார்கள் தங்கள் வருமானத்தைப் பத்தாயத்தில் பதுக்கினார்கள். அந்த வளம் நாசமானபோது பத்தாயத்தின் மீது பூனை தூங்கியது.
முப்போகம் விளைந்தது; யானைகட்டி போரடித்தது சோழர்கால வரலாற்று சின்னமாக இப்போதும் கருதப்படுகிறது பத்தாயம். ஏர்கலப்பை எவனோ பிடிக்க வேர்வையாலும் நெல் மணிகளைச் சமீன்தாரும் பண்ணையாரும் சுரண்டிக் கொண்டது இன்னொரு புறம், கூலி உயர்வுக்காக கொளுத்திய 44 சடலங்கள் வெண்மணி சாட்சி, அடிமை வாழ்வுக்கு அரிதாரம் பூசிய காவிரியோர திரைகடலோடி திரவியம் தேடு என்பதைவிட, கர்நாடகா ஓடி கஞ்சியைத் தேடு என்பதே சரி. டி.எம்.சி. கணக்கும், வழக்கும் வாய்தாவும் கட்சி மாறிகளும் பதவி வெறியர்களுமே திரும்பத் திரும்ப ஏமாற்றும் மண் தஞ்சை மண், நான்முடி சோழர்களாலும் ஏன் முடியாது. நீள்கிறது இந்தப் பிரச்சனை? தவிர -உயிர் வாழ்வதையே பேராசையாகக் கருதுகிற பிற்போக்காளர்கள் முன்னால் என் மக்களின் கோஷம் எடுபடுமா? கேள்விகளோடு முடிந்துவிடாது போராட்டம். தீர்வும் தீர்ப்பும் காலம் எழுதும். எழுதும் இடத்தில் பத்தாயம் சின்னமாக மட்டுமிராது தஞ்சை மக்களின் எண்ணமாகும்.
பசிக்கிறது எனச் சொல்ல யார் கற்றுத் தந்தது? பருக்கைகளைத் திருடிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். பத்தாயத்தை மத்திய தர குடும்பத்து களஞ்சியமாகக் கருதியது போய் இடமடைக்கும் வெற்றுப் பலகையாக செல்லரிக்க நேர்ந்திருக்கிறதே … எம்பாட்டி வீட்டில் பத்தாயம் இருந்த இடத்தில் இப்போது வெறுமை. பெருமைகளை இன்றென் வாழ்வோடு பொருத்தும் போது நெருக்கமற்று, நெருடல்கள் தோன்றிய இடமே அந்தத் தொகுப்பின் அடித்தளம்.
கிராமத்துக்குப் போயிருந்தேன், எப்போதும் என் அன்புக்கு உரிய தமிழரசன் எங்கே என்றேன். பஞ்சம் பிழைக்க திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்குப் போயிருக்கிறான். என்றார்கள், இதுவா? சோறுடைத்த சோழ நாட்டுப் பெருமை?
பெரிய கோவில் வாசலில் நண்பர்கள் கூடுவோம், போரடித்த யானைகள் எட்டணாவுக்காக தும்பிக்கை ஏந்த யானைப் பாகன் பழக்கப்படுத்தினான்.
மொத்தத்தில் தஞ்சாவூரின் வரலாறு வாழ்ந்து கெட்ட கதைதான். வாழ்ந்தது தெரியாது. கெட்டது முன்னாலிருக்க காவிரி பிரச்சனை, தேசமே தீப்பற்றினாலும் மனித சங்கிலி நடத்தினாலும் மனு, போராட்டம், தன்னுரிமை என்றாலும், நரிமணம் பெட்ரோலை, நெய்வேலி மின்சாரத்தை, என்பதோடு வீரப்பன் ராஜ்குமாரை கடத்தினாலும் தீராத பிரச்சனையாக இந்திய ஒருமைப்பாட்டின் கலசமாகக் கருதப்படுவது காவிரிதான்.
பத்தாயத்தை
தொம்பை,குதிர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. தஞ்சை வட்டாரம் முழுக்கவே பத்தாயம் என்பது பிரசித்தம். குலைந்து போன ஒரு குறியீட்டை எதிர்கால, கடந்த காலத்தோடு நினைத்து பார்க்க பத்தாயம் உதவிற்று. இப்போதைய பத்தாயங்களின் இருப்பு இதைத் தவிர வேறில்லை. வரலாறு விளக்கும் முந்நூறு, நானூறு வருடத்துக்கு முந்தைய சோழநாட்டுப் பெருமைதான் (யுகபாரதி 16.8.2000).
தஞ்சை மாவட்ட மருதநில மக்களின் வாழ்வியல் வரலாற்று குறியீடாக பத்தாயம் முன்னிறுத்தப்படுகிறது.
கைவினைப் பொருட்கள்
நாட்டுப்புறக் கைவினைப் பொருட்களில் மண்பாண்டக் கலையும் ஒன்று. தமிழகத்தின் மண்பாண்டக் கலை சிறப்பு வாய்ந்தது.கலை அழகுடன் மண் பாண்டம் செய்வதையே பெரும் கலையாக்கி விட்டனர். தமிழ்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் சில கைவினைப் பொருட்கள் உலக மக்களையே வியக்கச் செய்கிறது. தமிழகமெங்கும் புதைபொருள் ஆய்வில் கண்ட மண்பாண்டங்கள் பழமையானவை. சங்கப்பாடல்களில் மண்பாண்டம் செய்பவரைக் ‘கலம் செய்வோர்’ என்பர். திருக்குறள் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீ இயற்று’ எனச் சுட்டும். மண்பாண்டம் செய்பவரைக் ‘குயவர்’ என்பர். மண்பாண்டங்களாகச் சட்டி, பானை, அடுப்பு, உண்டியல் முதலியவற்றைக் கூறலாம். கிளியாஞ்சட்டி, தோண்டி, முட்டி, கலயம், பாலை, குண்டான். கஞ்சிசட்டி, ஆணச்சட்டி, முக்குழிச் சட்டி, அடுப்புசட்டி (தே.லூர்து, 996:364) போன்றவை இன்றும் நாட்டுப்புற மக்களிடையே உள்ளது. மேலும் மண் பாண்டச் சமையல் உடல்நலத்திற்கு ஏற்றது. கிராமப்புறங்களில் கறி உணவு சமைக்கின்றபோது மண்பாண்டங்களையே இன்றும் பயன்படுத்துவர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களைப்பயன்படுத்தினாலும், கறி உணவிற்கு மட்டும் சிலர் வீட்டில் மண்பாண்டங்களில் சமைப்பதைக் காண முடிகிறது.
மண்பாண்டம் பற்றி யுகபாரதி தன் கவிதைகளில் சொல்லுகிறார்.நாட்டுப்புறக் கைவினைப் பொருட்களாக மூங்கில், தென்னை, ஒலை, பனை ஒலைப்பாய் பொருட்களைச் சொல்லலாம். மூங்கில் பொருட்களில் செய்யப்படுகிற பொருட்களாக மூங்கில் கூடையைக் குறிக்கலாம். இந்தக் கூடைகள் சோற்றுக் கூடை, வெங்காயக் கூடை, மீன்கூடை, அழுக்குக்கூடை முதலியனவாகும். இந்தக் கைவினைப் பொருட்கள் பெரும்பான்மையாக ‘குறவர்’ இன மக்களால் செய்யப்படுகின்றன. கூடைகளில் பெரிய அளவிலான கூடை ‘பஞ்சாரம்’ என்பதாகும். இது உள்கூடு அகலமாக ‘யு’ வடிவத்தில் இருக்கும். கூடை கீழிருந்து குறுகிய அளவில் பின்னப்பட்டு வாய்ப்பகுதி அகலமாகவும் இருக்கும். இந்தக் கூடை கோழிகளைக் கவிழ்த்து மூடப் பயன்படுகிறது. நாட்டுப்புற மக்கள் இன்னும் கோழிகளைக் கவிழ்த்து மூடப் பஞ்சாரத்தைப் பயன் படுத்துகிறார்கள்.என்கிறது ‘பஞ்சாரம்’ கவிதை. பனை ஒலைப் பொருட்களில் கைவி னைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. விசிறி, பனை ஒலைப்பெட் டி, பனைஒலைப் பாய், குருத்தோலையும் ஈர்க்கும் கொண்டு தொட்டிகள், பீரோ பெட்டிகள், நகைப்பெட்டிகள், முறங்கள் முதலியன செய்யப்படுகின்றன. குழந்தைகள் விளையாடும் ‘கிலுக்கு’ பனை ஒலையில் சின்னஞ்சிறு பெட்டி போல அமைக்கப்பட்டு உள்ளே சிறு கற்கள் இடப்பட்டுப் செய்யப்படுகிறது. கிளி, பூனை போன்ற பொம்மைகளும் குழந்தைகள் விளையாட தயாரிக்கப்படுகின்றன. கவிஞர் தன் சிறுவயதில் பஞ்சுமிட்டாய்க்காகத் தன் கிலுகிலுப்பையைப் பறிகொடுத்து ஏமாந்ததைக் குறிப்பிடுகிறார்.(நூலிலிருந்து)
வாழும் மரபுகள் – ஆறு.இராமநாதன்
விலை:150/-
Buy this book online: https://www.heritager.in/product/vaazhum-marabugal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers