சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம்

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம் சங்க காலம் வீரயுகக் காலம். சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கிடையே தொறுப் பூசல்கள் அடிக்கடி நடக்கும். சங்க காலத்தில் நிகழ்ந்த தொறுப் பூசல் வேறு, போர்கள் வேறு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (பூங்குன்றன், ர. 2016: 19-30). ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் (தொறுப்…