மல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளி
பல்லவர் கலையறியாதாரிலர். மண்டகப்பட்டில் அரும்பி, மல்லையில் விரிந்து, கச்சியின் கற்றளிகளாய்ப் பூத்த பல்லவக் கலைக்கொடியின் மலர்கள் இன்றும் மணம் வீசித் தன் பக்கம் இழுக்கின்றன. என்றோ ஏழாம் – எட்டாம் நூற்றாண்டு என்றில்லாமல், இன்றும் இந்தக் கலைக்கூடங்கள், கடி பொழில் வாழ் கடல்மல்லையில் சாமானியர்களை நிழற்படங்களுக்காகவும், அறிஞர்களை ஆராய்ச்சிக்காகவும், கலை ஆர்வலரைச் சிற்பங்களுக்காகவும் தன்னகத்தே பல…