Rajasekar Pandurangan

Rajasekar Pandurangan

Editor-in-Cheif of Heritager Magazine

கோவில் ஆய்வின் வகைகள்

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும்.   இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள்,…

உலக சுற்றுலா நாள் – பல்லவர் கால கோவில்கள் – கைலாசநாதர் கோவில் மரபுநடை

உலக சுற்றுலா நாளை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த, தேர்ந்தேடுக்கபட்ட்ட 100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்காக, “காஞ்சி பல்லவக் கோவில்கள் சுற்றுலா” நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு பல்லவர்கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கல்வெட்டு மற்றும் வரலாறு குறித்து அறிமுகப்படுத்த, தென்னகப் பண்பாடு குறித்து பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கும் தளி பண்பாட்டு நடுவம் (Thali…

சோழன் செங்கணான் – தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால் சோழன் செங்கணான்: பழந்தமிழ் இலக்கியம் என்னும்போது அது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவைகளையே பொதுவாக உணர்த்தும். பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகையில் அடங்கிய பதினெட்டு சிறுநூல்களுள் ஒன்றான “களவழி நாற்பது’ என்னும் நூலின் இறுதியில், “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால்…

அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்

சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன. காவிரி நதியின்‌ பயன்பாட்டை நன்குணர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காவிரி நதியின்‌ கரைகளில்‌ ஆங்காங்கே படித்துறைகளையும்‌, மண்டபங்களையும்‌ அமைத்து மக்களுக்குச…

அறுபடைவீடு – திருத்தல பயணம் 3 Days – Chennai to Aarupadai Veedu Tour – TCC Spiritual Tours

சென்னையில் இருந்து துவங்கும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை நோக்கிய திருத்தலப் பயணம். தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அறுபடைவீடு திருத்தல பயணம் பயணம் – 12,13,14 ஜூலை…

திரு. சொ. சாந்தலிங்கம் – பிறந்த நாள் வாழ்த்துகள்

தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரையில் வாழ்ந்து வரும் அய்யா, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராகவும்,…

காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி…

தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு…

முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாட்சியர், முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளர் ஆகிய பணிப்…