களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும் பூதமங்கலம் என்ற பெருநகரில் வெணுதாசன் என்பானுக்கு உரிய மாளிகையில் நான் வாழ்ந்திருந்த பொழுது விநய விநிச்சயம் என்ற இந்த நூல் தொகுக்கப் பெற்றது. இது, களப்பிரர் குலத்தைச் சேர்ந்த அச்சுத விகண்டன் காலத்தில் தொடங்கப் பெற்று முடிக்கப் பெற்றது என்று நூலின் பின்னுரையில் இவ்வாறாகப் புத்ததத்தர் குறிப்பிடுகிறார். அச்சுத விக்கந்தன் என அழைக்கப்படும் களப்பிர அரசன்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் பூதமங்கலத்திலும் சிறந்த தவப்பள்ளிகள் இருந்தமை குறிப்பிடப்படுகிறது. புத்ததத்தரின் நூல் குறிப்பிடும் இச்செய்தியை ஈழத்தைச் சேர்ந்த ஏ. பி. புத்த தத்தர் என்பவர் தலைமையில் ஆசிரியர் குழு பதிப்பித்த புத்ததத்தரின் நூலிலிருந்து [முதல் பதிப்பு: 1915 இரண்டாம் பதிப்பு : 1928] பி.டி. சீனிவாச அய்யங்கார் அறியத் தருகிறார் [10].களப்பன் என்ற தமிழ்ச் சொல், பாலிமொழியில் கலப்பஹ் / கலப்பஹா என ஆகும்)

இதன் பொருள்: அனைத்துவகை மக்களைக் கொண்டதும், சோழப் பேரரசின் கடற்றுறை நகரானதும், வாழைத் தோட்டங்களாலும், பனை, தென்னந் தோப்புக்களாலும் நிறைந்ததும், தாமரை, அல்லி மலர்களால் முழுதும் மறைவுண்ட நீர் நிலைகளால் ஒளி பெற்றதும், காவிரி பாய்வதால் மண் வளம்பெற்றுத் தூய்மை பெற்றதும், வளம் கொழித்து, ஒரு நகரின் தேவை அனைத்தையும் கொண்டதுமாகிய, குழப்பம் இன்றி, அமைதி நிலவும் பூதமங்கலம் என்ற பெருநகரில், நன்கு கட்டப்பெற்ற, வெளிப் புறச்சுவர் அகழ்களால் வெணுதாசன் என்பானுக்கு உரியதும், ஆற்றங்கரையில் வரிசையாக வளர்க்கப்பட்ட வாநீர மரங்களால் சிறப்புற்றதும், பல்வேறு இனப்பறவைகளைக் கொண்டு மக்கள் உள்ளங்களுக்குக் களிப்பூட்டுவதும், இனிய தாமரை மலர்களால் முழுமையாக மூடப்பெற்ற குளங்களால் அழகு பெற்றதும், இனிய நீரால் நிறைந்த சிறந்த கிணறுகளால் சிறப்புற்றதும், பரந்து அகன்ற வான் சுதை தீட்டப்பெற்று ஒளி பெற்ற எண்ணிலா வீடுகளைக் கொண்டதும், கைலைமலை முகடுகளை வெற்றி கொண்டு எள்ளி நகையாடும் உயர்வுடையதும், கூதிர்ப் பருவத்து வான் முகில் போலும் ஒளியுடையதுமான கோபுரங்களால் பிளவுண்ட மண் உடையதும் ஆகிய தவப்பள்ளியில் மக்கள் உள்ளத்தை ஐயத்தின் நீங்கித் தெளிவு பெறச் செய்யும் ஒரு மாளிகையில் வாழ்ந்திருந்த என்னால் என் மாணவர்களின் நலம் கருதியும், வினயம் என்ற நூலைக் குறுகிய காலத்தில் எளிதில் கற்றுக்கொள்ள விரும்பும் பிக்குகளின் ஒற்றுமைக்காகவும், புத்த சிம்மர் போதித்த கொள்கைகளையொட்டி, இத்தொகுப்பு நூல், புத்த சிம்மரைப் பெருமை செய்வான் வேண்டி, தொகுக்கப் பெற்றது. இது களப்பிரர் குலத்தைச் சேர்ந்த, குற்றத்தின் நீங்கிய, அச்சுத விகண்டன் காலத்தில் தொடங்கப் பெற்று முடிக்கப் பெற்றது. ( விநய விநிச்சயம் நூலில் இடம் பெறும் பாடலும், அதற்கான விளக்கவுரையும்: தமிழர் வரலாறு, பி.டி.சீனிவாச அய்யங்கார் நூலில் இருந்து, பக்கம்: 311இல் காணப்படுமாறே மேலே கொடுக்கப்பட்டுள்ளது) (நூலிலிருந்து)

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு – சவரிமுத்து
விலை: 225/-
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/the-history-of-mutaraiyar-spanning-three-periods/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers