இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்
இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும்…