காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை
சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி…