விஜயநகர நாயக்கர்கள் கன்னடரா தெலுங்கர்களா?
வீர வல்லாளனுக்கு விஜய வல்லாளன் என்ற மகன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சில அறிஞர்கள், ஹரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார். பொயு 1314ல் காகதீய அரசில் குறுநில மன்னனாக இருந்ததைக் குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். கம்பிலி நகரம் துக்ளக்கிடம் சென்றபோது இவர்கள் இருவரும் அங்கே பணியமர்த்தப்பட்டனர்…