காதலும் துரோகமும் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #1
கரும்பெண்ணை நதிக்கு தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமிருந்தன. துங்கபத்ரை சிவப்பு வண்ணத்தில் உயிரற்ற உடல்களை தூதனுப்பிக்கொண்டே இருந்தது. கரும்பெண்ணை, பயத்தில் வேக வேகமாக குணக்கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. எவ்வளவு வேகமாக விரைந்தாலும், துச்சாதனன் உரித்த பாஞ்சாலியின் சேலை போல், தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. துங்கபத்ரையும் கரும்பெண்ணையும் இணையும் இடத்தில் தண்டிறங்கி இருந்தது சோழர் படை. கரைபுரண்டோடும்…