சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் :
பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள் குறித்தும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.
“சங்க இலக்கியங்கள் மிகச் சிறந்த நகர்ப்புற இலக்கியங்கள் ஆகும். ஏனெனில் வேறு எந்த மொழிகளிலும் உள்ள பழமையான இலக்கியங்கள் எதுவும் இந்த அளவுக்கு ஏராளமாகவும் துல்லியமாகவும் விரிவாகவும் நகர்ப்புற வாழ்வின் நுட்பங்களை விவரிக்கவில்லை.
பழந்தமிழர்கள் நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மீது பெரும் காதல் கொண்டிருந்தனர். மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களும், சங்க காலத்திற்குப் பிந்தைய காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவையும் நகர வாழ்வைப் பற்றி மட்டுமல்லாது மக்களிடையே நகரங்களுக்கு இருந்த முதன்மை மற்றும் மதிப்பைப் பற்றியும் பேசுகின்றன.
”சிலப்பதிகாரத்தைப் பாடிய இளங்கோவடிகள், நிலவு, கதிரவன் மற்றும் மழையை வாழ்த்திப் பாடுவதோடு சோழ நாட்டின் துறைமுக நகரமான பூம்புகாரையும் வாழ்த்திப் பாடுகிறார். பூம்புகார் என்பது வெறுமனே ஒரு மனித குடியேற்றம்அல்ல. ஆனால் வளமான வாழ்விற்கு ஆழ்ந்த பொருள் கொண்ட அடையாளமாய்த் திகழ்கிறது. சிலப்பதிகார காப்பியம் முழுவதுமே மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, சேர நாடுகளின் தலைநகரங்களான பூம்புகார், மதுரை, வஞ்சி ஆகியவற்றின் பெயரில் இக்காண்டங்கள் அமைந்துள்ளன. மொழியியல், மத மற்றும் இன அடையாளங்களைக் கடந்து தனியான ஒரு அடையாளமாக இடப்பெயர் முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கான சான்றே இதுவாகும்.”
சிந்துவெளியின் கடல்சார் பண்பாடு – ஒரு புதிர்
இந்தியாவின் கடலோடி வரலாற்றின் தொடக்கப்புள்ளி சந்தேகத்திற்கு இடமின்றி சிந்துவெளி நாகரிகமே. நீண்ட தூர கடல் பயணங்களில் செயல்திறன், நுட்பம் ஆகியவற்றை வளர்த்தெடுத்தவர்களாக சிந்துவெளி மக்கள் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தாமிரம், சிறப்பு வாய்ந்த மரக்கட்டைகள், யானைத் தந்தம், முத்து, விலைமதிப்பற்ற இரத்தினக் கற்கள் மற்றும் தங்கம் போன்றவற்றை சிந்துவெளி வணிகர்கள் கொண்டு வந்ததாக மெசோபொடேமியாவில் கிடைத்தக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சுமேரியாவில் யூஃரட்டிசு நதிக்கரையில் உள்ள ஊர் என்ற நகரத்தில் சிந்து வணிகர்களும் மணி வேலை செய்பவர்களும் தங்கள் குடியிருப்புகளை உருவாக்கியிருக்கின்றனர்.
சிந்துவெளி நாகரிகம் படிப்படியாக வீழ்ந்தது என்று வைத்துக் கொண்டால், அதன் அதிதிறன் வாய்ந்த கடலோடிகள், நீண்ட தூர வணிகர்கள், தொழில்நுட்ப திறன் வாய்ந்த தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை என்னவாயிற்று என்ற கேள்வி எழுகிறது. இயற்கையாகக் கடல்சார் வணிகர்கள் தங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான லோத்தலுக்கு தெற்கே உள்ள கடற்கரையில் தங்கள் வாணிபத்தைத் தொடர விரும்பியிருப்பார்கள்.
எனவே மேற்கு இந்திய மற்றும் தென் இந்தியா கடற்கரைப் பகுதிகளில் சிந்துவெளியின் கடல்சார் பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் அதன் எச்சங்களையும் கண்டறிவது நமது நோக்கமாகும்.
சங்கத் தமிழில் கடல்சார் பண்பாடு :
பழந்தமிழ் பண்பாட்டின்படி பாண்டியர்கள் தங்கள் நிலப்பகுதிகளையும், ஒரு பழமையான ஆற்றையும், ஒரு மலையையும், தங்கள் தலைநகரங்களையும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த கடல்கோள்களில் இழந்தார்கள் என்று தெரிகிறது. இந்த இயற்கைப் பேரிடர்கள் காரணமாக பாண்டியர்கள் இடம் பெயர நேர்ந்தது. பாண்டியர்களின் சின்னம் மீன் என்பதும் குறிப்பிடத்தக்கது. (நூலிலிருந்து)
சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும் – பழ.நெடுமாறன்
விலை: 180/-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Buy this book online: https://www.heritager.in/product/sinduveli-nagarigamum-pazhanthamizhar-nagarigamum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers