‘முத்தரையர்’ என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள் :
“ஏறக்குறைய கி. பி. 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன் மிகச் சிறந்த தீரனாகவும் அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்கதுர்விநீதன் “முத்தரையர் என்றால் என்ன பொருள் என்றும் தன் செப்பேட்டில்கூறிபருத்திறான். இவனது செப்பேடு இரு மொழிகளில் உள்ளது.
121 முதல்பகுதி சமஸ்கிருதன், ரெபெடு இருபொகைளிகன்னடத்தி லும் உள்ளது. (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்) சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன்- (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜனே துர்விந்த நாமதேயன்) என்று குறிக்கின்றான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும்போது (ஸ்ரீ கொங்கணி முத்தரசரு) என்று கூறுகின்றான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல்லாக விருத்த ராஜன் என்ற மொழி பெயர்ப்பு உள்ளது. ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தக்குடி என்பதன் பொருளே உண்மையில், முது அரசர் முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும். துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இது போல சிவமாறன் என்ற தங்க மன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் ஸ்ரீபுருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் ‘விருத்தராஜா’ என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்றல்ல. இரண்டல்ல! பல கல்வெட்டு களும், செப்பேடுகளும் கங்கர்களை முத்தரசர் என்று அரசுப் பட்டயங்கள் குறிக்கின்றன.
இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாகப்பட்டுள்ளது. ஆதாரம்:- இரா.நாகசாமி முத்தரையர். கட்டுரை தினமணி 28.10.88 நன்றி.
மாமன்னர், சுவரன் மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆசிரியர் பெ. இராமலிங்கம் எம்.ஏ. டாக்டர் மொ.அ.துரை அரங்கசாமி அவர்கள் சங்க கால சிறப்புப் பெயர்கள் என்ற நூலில் முத்தரையர் குறித்து கீழ்க்காணும் கருத்தைத் தெரிவிக்கிறார்.
சங்க நூல்களில் காணும் பிறகுறிப்புகளிலிருந்து முத்தரை யரும் தொண்டையரும் ஒருவரே என்பது தெளிவாகின்றது. பெரும் பாணாற்றுப்படை வரி 3) பல்வேல் திரையன் என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் தொண்டையர் குடியில் தோன்றிய திரையனே ஆவான். இவ்வரசனே இளையதிரையன் எனக் கொள்ளப்பட்டான்.
வேங்கட மலையில் உள்ள மூத்த திரையனிடமிருந்து காஞ்சிபுரத்திலுள்ள இளைய திரையன் தன் கன்று ஈன்ற பைங்கண்யானைகளுக்கு முற்றாத மூங்கில் முளையைக் கொண்டு வந்தான். என காட்டூர் கிழார் மகனான கண்ணனார் என்பவர் தன் 85 ஆம் பாடலில் கூறியுள்ளார். காலப்போக்கில் மூத்த திரையன் முத்தரையன் ஆனான் எனக் கொள்ளப்படுகிறது.
டாக்டர் இரா. பன்னீர் செல்வம் அவர்களின் கருத்து
களவர நாட்டினராகிய கங்கர்கள், களப்பிரர் என்றும் முத்தரையர் என்றும் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் களவர நாடு மைசூர்ப்பகுதியில் உள்ளதால் அவர்களின் தாயகம் ஆகலாம் என்றும் வழங்குவதாயிற்று என்பதும் தெளிவாக அறவுள் கிடக்கின்றன.
முத்தரையர் பெயர்க் காரணம் பற்றி உயர்திரு. கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் கூறுவதாவது
The etymology of Name yields several meanings of which Mu+thriyar (Lords of three teritories) Seems More reasonable and May well fit into the historical context of times, one other important title of this family as kalavara or kalvara Kalavara which recalls the name kalabhra.
முன்னாள் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் திரு.நடன காசிநாதன் அவர்களின் கருத்து
தொடக்கம் முதல் களப்பிரர்கள் பல்லவர்களுக்கு எதிரிகளாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்தரையர்கள் ஆரம்ப காலமுதல் பல்லவர்களுக்கு உதவுபவர்களாகச் சிற்றரசர்களாக இருந்திருக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
வரலாற்று வித்தகர் பேராசிரியர் ம.இராஜசேகர தங்கமணி அவர்கள் உரைப்பது
இவர் தனது பாண்டியர் வரலாறு (1978) என்ற நூலில் ‘எனவே களப்பிரரும், முத்தரையரும் ஒருவரே எனக் கொள்ளுதலே பொருத்தமுடையது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அண்மைக்காலத்தில் இவர்தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார். முத்தரையரைக் களப்பிரர் எனக் கருதமுடியாது இவர்கள் தமிழ்நாட்டையே தமது பூர்வீகமாகக் கொண்ட தனித்தமிழ் குடியினரே என்பது கருதலரம் இவர்களைப் பாண்டியரின்கால்வழியினர் அல்லது பாண்டியரின் கிளைக் குடியினர் எனக் கருதுவதே பொருத்தமுடையது. செந்தலைக் கல்வெட்டில் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் “பொருகயல் சேர்வேல் கொடியோன்,” என்று குறிப்பிடப் பெற்றிருப்பதால் இக்கருத்து உறுதி பெறுகிறது. அடுத்து மாறன், தென்னவன், மீனவன் – முதலான முத்தரையரது விருதுப் பெயர்களும், இவர்கள் பாண்டியருடன் உறவுடையவர் என்பதனை உறுதிபடுத்துகின்றன.
திரு. செந்தமிழ்செல்வன் அவர்களின் கருத்து
தொண்டை நாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சோழ நாயனாரையே வடபுலக்கோன் என்று திருமங்கையாழ்வார் கூறுவதால்,சோழ நாட்டிற்கு வடக்கேயுள்ள ஊரையே வடபுலம் என்று பண்டையோர்கூறினர். அக்கருத்திலேயே ஒரு வேளைகரிகால் சோழனால் குடியேற்றப்பட்டு பின்னர் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ்மன்னர்கள் தமிழகத்தை ஆரியமயமாக்கிக் கொண்டிருந்த செய்கையினை எதிர்த்துப் புரட்சி செய்து தமிழகத்தைக் கைப்பற்றி இருக்கலாம். அவ்வாறு கைப்பற்றிய தொண்டைநாட்டுத் திரையரே முத்தரையர் என ஆனார்கள் என்பதை சான்றுகள் உறுதிப்படுத்தலாம்.மெக்கன்சியின் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பான பாளையப்பட்டுக்களின் வம்சாவளியில் காணப்படும் தலைய நாட்டு பட்டக்காரர் வள்ளல் கவுண்டர் கைமீது கூறுவதாவது
வேடர்குல சாதியில் காள அஸ்தி பிற தேசங்களுக்கு இராசாவாக இருக்கப்பட்ட வம்ச பரம்பரையிலே முத்து ராசாக்கள் கூட்டமொன்று பிற சுத்துப் பட்டுயிருக்கும் நாளையில் முத்துராசா சாதியென்றும் மேற்பிற கத்திபட்டவற்களாயின. அந்த இராச்சி யத்தில் பாளையப்பட்டு கற்களாகியிருக்கும் நாளையில் நிமிர்ந்தபட்டி நீலியப்பகவுண்டன் வமிசாவளி கைபீடு மேலேக் கண்டவாறு கூறியது.
வரலாற்றுப் பேரறிஞர் ஆய்வர் மு.அருணாசலம் என்பவர் கூறும் கருத்துக்கள் களப்பிரர் என்பவர் ”சதவாகனர் என்னும் மக்களில் எஞ்சியகூட்டத்தார் அல்லர். அவர்கள் கங்கையருடைய வழிவந்தவர்
அல்லர். அவர்கள் கங்கையருடைய வழிவந்தவர் அல்லர்.கடல்வழியாக வந்தவரும் அல்லர். அவர்கள் கள்வர் கோமான் புல்லியின்வழி வந்தவர்கள் அல்லர். வடுகரோ அல்லர்.
அவர்களுடையபூர்வீகம் வேங்கடம் அன்று; எருமை நாடும் அன்று. அதுதெற்கத்திய சமண, சமயம் தோன்றிய இடம் சிரவண பெலகோலா
” என்ற இடத்தைச் சுற்றியுள்ள இடமாகும். அவர்கள் ஒருஅரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர். ஆயினும் அவர்கள் பிராகிருதமொழி கன்னட மொழி பேசிய கொள்கைக் கூட்டம் ஆகும்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூற்று ஏறத்தாழ கி.பி.575இல் பல்லவன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடம் இருந்து வென்று கைப்பற்றினான். பிறகு சோழநாடு 10ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சி க்கு உட்பட்டு இருந்தது. பள்ளன் கோயில் செப்பேடு கூறுகிறபடி பல்லவன் சிம்ம விஷ்ணு வென்று தோற்கடித்த சோழநாட்டுச்சிம்ம விஷ்ணுவே களப்பிர அரசன் சிம்மவிஷ்ணுவே என்று கூறினார்.
டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் நேரிடையான கருத்துக்கள்
வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக்களப்பிரர் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளூரிலும் முத்தரையர் என்னும் பெயருடன் சிற்றரசர்கள் ஆகிப் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்க வாழ்ந்து வந்தனர். இப்படி முத்தரையர்களும் களப்பிரர்களும் ஒருவரே என்று உடன்படுவோர் : 1. டாக்டர். இரா. நாகசாமி 2. டாக்டர் மா.இராசமாணிக்கனார். 3. டாக்டர் இரா. பன்னீர் செல்வம், 4. முதலில் ஆதரவாகப் பேசி மறுத்தார். இராசசேகர தங்கமணி, 5. உயர்திரு. கே.ஜி. கிருஷ்ணன் உடன்பட்டு ஆங்கிலத்தில் கூறியுள்ளார். முத்தரையர்கள் வேறு களப்பிரர்கள் வேறு என்று கூறுபவர்கள் : 1. டாக்டர். நடன காசிநாதன் 2. இராசசேகர தங்கமணி 3. செந்தமிழ்ச்செல்வன்.
புதுக்கருத்து கூறுபவர்
டாக்டர் மொ.அ. துரை அரங்கசாமி, ஆய்வு அறிஞர் மு. அருணாசலம். “கி.பி. 846இல் விஜயாலயன் முத்தரையரைத்தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றினான். அதன்பின்னர் தஞ்சையே சோழன் தலை நகரானது ” என்று அ. இராமசாமி தமது தமிழ்ப் பேரரரசுகளின் சரிவும், வீழ்ச்சியும் என்ற நூலில் கூறியுள்ளார். “கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த முத்தரையன் தஞ்சை க்கோன், எனவும் தஞ்சை நற்புகழாளன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டு உள்ளதால் தஞ்சைமாநகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்தலைநகராவதற்கு முன்னர் முத்தரையர்குரிய சிறந்த நகரமாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது.” என்று சதாசிவ பண்டாரத்தார் தமது பிற்கால சோழர் சரித்திரம் என்னும் நூலில் கூறி இருக்கிறார்.
முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு – சவரிமுத்து
விலை: 225/-
Buy this book online: https://www.heritager.in/product/the-history-of-mutaraiyar-spanning-three-periods/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/