எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள்

எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள் :

பாண்டியரின் தலைநகரான மதுரை மாநகரும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சமணசமயத்தின் ஊற்றாய்த் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியமன்னரின் ஆதரவுடன் இப்பகுதியில் சமணம் நிலைபெற்றுவிட்டது. இதனை மதுரையைச் சுற்றியுள்ள சிறிய குன்றங்களிலுள்ள குகைத் தளத்துப் பள்ளிகளில் காணப்படும் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. தென்னிந்தியாவிலேயே சமணசமயத் துறவிகள் பற்றித் தெரிவிக்கும் பழைமையான கல்வெட்டுகள் மதுரையைச் சூழ்ந்த குன்றுகளிலேயே காணப்படுகின்றன .

சங்ககால மலைப்பள்ளிகள் :

இக்குன்றுகளிலுள்ள இயற்கையான குகைத்தளங்களைச் சமண முனிவர்கள் உறைவதற்கு உரியமுறையில் உருவாக்கிக் கொடுத்தோர் பற்றி இக்கல்வெட்டுகள் பேசுகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன், செல்வவளம் படைத்த பெருவணிகர்கள், வணிகர் குழுவினர், ஊர்த்தலைவர்கள் போன்ற பலர் செந்நெறியில் ஒழுகிய சமண முனிவர்களுக்கும் அவர்களது சீடர்களுக்கும் இக்குன்றங்களில் உறைவிடம் அமைத்துக் கொடுத்துள்ளனர். இம்மலைப் பள்ளிகளில் இருந்த குகைத்தளத்தில் வளவளப்பான கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் முன்புறம் மழைநீர் குகைத்தளத்தின் உள்ளே நுழையாதவாறு தாழ்வாரங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. குகைத் தளத்தின் முகப்பில் புருவம் வெட்டப்பட்டு மழைநீர் தடுக்கப்பட்டது என்பது இப் பள்ளிகளின் அமைப்பை ஆராய்வார்க்குப் புலப்படும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட காலத்தினைச் சார்ந்த மலைப்பள்ளிகள் மதுரையைச் சுற்றியுள்ள கீழ்க்கண்ட இடங்களில் இருந்துள்ளன.

1. திருப்பரங்குன்றம்
2. சமணமலை
3. கொங்கர்புளியங்குளம்
4.விக்கிரமங்கலம்
5. அணைப்பட்டி
6. யானைமலை
7. மீனாட்சிபுரம் (மாங்குளம்)
8. அரிட்டாபட்டி
9.அழகர்மலை
10. கருங்காலக்குடி
11. கீழவளவு
12. திருவாதவூர்
13. குன்னத்தூர் (வரிச்சியூர்)
14. திருமலை

இவை பாண்டியர் தலைநகரான மதுரையை நோக்கிச் செல்லும் பெருவழிகளில் மதுரையைச் சுற்றி நாற்புறமும் உள்ளன. சமண முனிவர்கள் மழைக்காலத்தில் இங்கு தங்கி, கோடைக்காலத்தில் மதுரையில் கூடிய மக்களிடையே தமது கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளன. சமணமுனிவரிடத்து ஈடுபாடு கொண்ட மதுரை நகரத்து வணிகர் சிலர் அழகர்மலையில் சமணமுனிவர்களுக்கு உறைவிடத்தை உருவாக்கித் தந்துள்ளனர்.’ மதுரையைச் சார்ந்த சமணமுனிவர் அத்திரன் என்பவருக்கு உதயன் என்பவன் அணைப்பட்டி அருகிலுள்ள சித்தர்மலையில் உறைவிடம் அமைத்துத் தந்துள்ளான். இதனை அங்குள்ள கி.மு. இரண்டாம் நூற்றாண் டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.

‘இதில் சமணமுனிவர் ‘அமணன்’ என்று குறிப்பிடப் படுகின்றார். தமிழ்நாட்டில் சமணரைக் குறிக்க அமணன் என்ற சொல் கையாளப்பட் டுள்ள மிகப்பழைமையான கல்வெட்டு இதுவேயாகும். சிரமணன் என்ற சொல்லிலிருந்து வந்த சமணன் என்ற இச்சொல், சமண, பௌத்த, ஆசீவக துறவியரைக் தொடக்கத்தில் குறிப்பிட்டது. பின்னர் இச்சொல் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சமணரையே
குறித்தது. (நூலிலிருந்து)

எண்பெருங்குன்றம் சமணம் வளர்த்த புனிதக் குன்றங்கள்
விலை: 600/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/enperunkundram-samanam-valarththa-punithak-kunrankal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers