அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்

சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன.

காவிரி நதியின்‌ பயன்பாட்டை நன்குணர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காவிரி நதியின்‌ கரைகளில்‌ ஆங்காங்கே படித்துறைகளையும்‌, மண்டபங்களையும்‌ அமைத்து மக்களுக்குச சேவை செய்தர். இதனைச்‌ சுங்கீதசுதா ருக்மணீபரிணயம எனும்‌ நூலகள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன. திருவரங்கம்‌, திருவையாறு, திருவலஞ்சுழி, கும்பகோணம்‌, திருவிடைமருதூர்‌, மயிலாடுதுறை ஆகிய இடங்களில்‌ இவரது பணியாக அமைந்த துறைகளும்‌, மண்டபங்களும்‌ இன்றும்‌ எழிலோடு திகழ்கின்றன.

திருவையாற்றில்‌ அமைந்த குளியல்‌ துறையும்‌, தீர்த்த மண்டபமும்‌ உளள இடம்‌ புஷ்ய மண்டபம்‌ எனும்‌ பெயரில்‌ திகழ்கின்றது. இவ்வாறு அமைந்துள்ள இம்மண்டபத்தின்‌ நடுவே ஐயாறப்பர்‌ ரிஷப வாகனத்தில்‌ எழுந்தருளுவதற்கேறற மேடை அமைப்போடு நான்கு புறமும்‌ அங்கணங்கள பெற்றுக் கால்களுடன், கருங்கற்‌ பணியாகக கலைநயம்‌ மிகுந்த மண்டபமாகத்‌ திகழ்கின்றது.

இம்மண்டபத்தின்‌ தென்புற அதிஷ்டானத்தில்‌ கிரந்த எழுத்தில்‌ வெட்டுவிக்கப்‌ பெற்ற அச்சுதப்ப நாயக்கரின வடமொழிக்‌ கல்வெட்டொன்றுள்ளது. இதன நிறைவுப்‌ பகுதினில்‌ முற்பகுதி, மிகச்சிறந்த வரலாற்றுத்‌ தகவல்களைச்‌ சுமந்து நிற்கின்றன.

கல்வெட்டு

“கைங்காயாணி கிருதானி யேன ஸகிலாந்யாஸம்ச ரங்கேஷிதுர்‌ பூய: ஸத்ய மஹீதரேந்ர தனயா ஸேதுச்சயே நாத்ருத: ௫ கருத்வா மன்மத வத்ஸரே வருஷபகே ஸித தவாதசீ தித்யாம்‌ யேன ஹிரண்ய காப மவனெள ச்ரேஷட்டத்வ மாப்தம்‌ மகத்‌ || தத்தாத்ரக்ஷ குணாய முச்யத விபு: செவ்வப்ப பூபாதமஜர்‌ ஸ்ரீமத்‌ வி்‌ விரிஞ்சி தீர்த்த மஹிதே கல்யாண ஸிந்தோஸ்தடே
வாமே பஞ்ச நதெள ……வவைவவைவ

இதன்‌ தமிழாக்கம்‌ “ரங்கநாதனுக்குச்‌ செய்ய வேண்டிய எல்லாக்‌ கைங்கரியங்களும்‌ எவனால்‌ செய்யப்பட்டனவோ, காவிரியில்‌ மறுபடியும்‌ அணை எவனால்‌ கட்டப்பட்டதோ, இதைச்‌ செய்துவிட்டு, மன்மத வருடம்‌, வைகாசி மாதம் பக்ஷம்‌ துவாதசியில்‌ பூமியில்‌ எவனால்‌ செல்வத்தை அடிப்படையாகக்‌ கொண்ட மாபெரும் மேன்மை அடையப்பெற்றதோ, செவ்வப்ப நாயக்கனின்‌ மகனான அச்சுதப்ப நாயக்கன்‌ விஷ்ணு, பிரும்மா இவர்களின்‌ தீர்த்தத்தால்‌ மகிமை பொருந்திய கல்யாண ஸிந்துவின (காவிரியின்‌) இடது புறம்‌ திருவையாற்றில்‌ …….. முற்றுப்பெறவில்லை) – என்று கூறுகின்றது

காவிரியின குறுக்கே கட்டப்பெற்றுச்‌ சோழர் காலத்திலிருந்து திகழும்‌ கல்லணை பிற்காலத்தில்‌ இயற்கையின்‌ சீற்றத்தாலோ பகைவர்களின்‌ தாக்குதலாலோ சீரழிந்தபோது, அதனை மீண்டும்‌ கட்டிப்‌ புதுப்பொலிவுடன்‌ இவர்‌ திகழச் செய்தார் என்பதை அறிகிறோம்‌. இப்பணி 1596ஆம்‌ ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாகும்.

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு – குடவாயில் பாலசுப்ரணியம் Page 139-140