தொழிலாளர் தோற்றம் :
நவீன மோட்டார்களின் பெருக்கமும் இவற்றை இயக்கும் நவீனத் தொழிலாளர்களும் பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களையும் அவற்றை இயக்கியத் தொழிலாளர்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியது. இப்போக்கை, “ஸைக்கிள்களும் மோட்டார்களும் இப்படி அதிகமாய் இறக்குமதியாக, குதிரைகள் இறக்குமதியாவது குறைந்து விட்டது .1910-11 இல்1006 குதிரைகள் வந்து இறங்கி இருக்க, இந்த 1911-12ஆம் வருஷத்தில் 780 குதிரைகளே வந்து இறங்கி இருக்கின்றன” என ஒருவர் எழுதியதானது பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்ததைக் காட்டுகிறது.
நூற்றுக் கணக்கான கழுதைகள், காளைகள், மலட்டுப் பசுக்கள் போன்ற போக்குவரத்துச் சாதனங்களின் துணையுடன் கடற்கரை நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் உப்பையும் தானியங்களையும் உட்புறப் பகுதிகளில் கொடுத்தல், காடுகளில் கிடைக்கும் பொருட்களையும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களையும் கொண்டு சேர்த்தல் எனச் சமூகம் இயங்குவதற்கு அடிப்படைத் தேவைகளான சரக்குகளை அங்குமிங்குமாக ஏற்றியிறக்கும் தொழிலைச் செய்தவர்களில் முக்கியமானவர் உப்புக் குறவர் ஆவர். படிநிலை ஜாதியக் கட்டமைப்புக்குள் இணைக்கப்படாத இவர்கள் அவற்றைச் சுயமாகவும் சுதந்திரமாகவும் செய்தனர்.
டெல்டா மாவட்டங்களில் கிடைத்த தானியங்களையும் பிற தேவையான பொருட்களையும் வாங்கி அவற்றைப் பிற பகுதிகளில் விற்பனை செய்ததால் பற்றாக்குறையையும் பஞ்சத்தையும் தடுத்ததில் குறவர்கள் முக்கியப் பங்காற்றினர். இரயிலில் சரக்குகளைக் கொண்டு செல்லும் புதிய போக்கு உருவானதால் அவர்களிடமிருந்த போக்குவரத்துச் சாதனங்களுக்கான தேவை முற்றிலும் குறையத் தொடங்கியது. தேவையற்ற வண்டிகளையும் விலங்குகளையும் பராமரிக்க இயலாத சூழ்நிலை அவற்றை விற்கும் நிலைக்குக் குறவர்கள் தள்ளப்பட்டனர்; அவர்களும் சுய தொழிலை இழந்தனர். அதாவது, நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள் பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களையும் அவற்றை இயக்கியோரின் தொழிலையும் ஒழித்தது. இதனால் குறவர் போன்ற சமூகங்கள் வாழ்வாதாரத்துக்கான வருவாயை முற்றிலும் இழந்தன. மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த மாற்றத்தால் மாற்றுத் தொழிலைக் கைக்கொள்ள இயலாத சூழல் குறவர்களைக் குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டியது.”
மோட்டார்களின் அறிமுகமும் பரவலாக்கமும் பாரம்பரியப் போக்குவரத்துத் தொழிலிருந்து அப்புறப்படுத்தி அவர்களைக் குற்றவாளியாக உருமாற்றியதை விளக்கத் தேவையில்லை. மற்றொரு புறம், நவீனப் போக்குவரத்தானது மோட்டார்களை இயக்கும் புதிய தொழிலாளர் வர்க்கமாக உருவாக்கியது. இந்த நிலையை என்.ஜீ.ரங்கா, “சென்னை மாகாணத்தில் கடந்த பத்தாண்டுகளில் 1910கள் முதல் மோட்டார் வண்டிகள் பெருத்துவிட்டது. சாலைகளில் பஸ்கள் ஓடின. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்கள் இதை மேலும் மேலும் வேண்டினார்கள்.
மோட்டார் பழுது பார்ப்போர். ஓட்டுநர், நடத்துநர், கிளீனர், பெட்ரோல் விற்பனையாளர்” போன்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்ததாகக் கூறுகிறார்.” மோட்டார்த் தொழிலைக் கற்பிக்கும் பயிற்சி நிறுவனங்களும் தோன்றின. “மோட்டார் ஓட்டவும் ரிப்பேர் செய்யவும் மோட்டார் எலக்டிரிக் வேலைகளும் மூன்று மாதத்தில் கற்றுக் கொடுக்கப்படும். தேர்ச்சியடைந்தவர்கள் கவர்ன்மெண்ட் லைசன்சும் கம்பேனி சர்ட்டிபிகட்டும் கொடுக்கப்படும். வாசிப்பு இல்லாதவர்களும் கற்றுக் கொள்ளலாம். தனலVI மோட்டார் ஒர்க்ஸ், மைலாப்பூர், மதராஸ்”35 என்பது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாயின.
தனலக்ஷிமி மோட்டார் ஒர்க்ஸ், தென்னிந்திய மோட்டார் இன்ஞினீயரிங் ஒர்க்ஸ் எனத் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தோன்றின. பின்னது 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மோட்டார்த் தொழிலைப் படித்தறிய “மோட்டார்கார் இயந்திர சாஸ்திரமும் அதன் அனுபோகப் பயிற்சி முறையும்” என நூல்களும் வெளியாயின.* குண்டூர் மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் எண்ணிக்கை 1921இல் 97 பேராக இருந்தது 1929ஆம் ஆண்டில் 300 பேராக அதிகரித்ததானது நவீனத் தொழிலாளர் வர்க்கம் வேகமாய் வளர்ந்ததைக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னை மாகாணத்தில் மாவட்ட வாரியங்கள் ஓட்டுநர் உரிமத்தில் ஏழு லட்சம் ரூபாய் ஈட்டின.”
மோட்டார் கம்பெனி வியாபாரிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முகவர்கள், உப முகவர்கள் உருவாயினர். இவர்கள் பெட்ரோல் விற்பனை முகவர்களாகவும் இருந்தனர். இவர்களின் வேலையாட்களைக் கொண்டு பேருந்து போக்கு வரத்தை நடத்தினர். மோட்டார் வண்டிகளின் பழுதுகளையும் நீக்கினர். இதனால் முகவர்கள் பெருத்த லாபம் ஈட்டினர். கிராமங்களில் பெட்ரோல் விற்பதிலும் மோட்டார் வேலைகளிலும் பஸ் ஓட்டுவதிலும் மக்களில் சிலர் ஈடுபட்டதால் பிற வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழல் உருவானது. இப்புதிய தொழிலாளர்கள் பிராமணர், பிராமணரல்லாத நிலவுடைமைஜாதிகளிலிருந்து தோன்றினர் எனக் கூற இயலாது. ஏனென்றால், உடலுழைப்பைத் தீட்டு எனக் கூறி அதை வெறுத்து ஒதுக்கிய அவர்களிடம் பொருளாதார, அதிகார வலிமையும் இருந்ததால் தொழிலாளர்களாக அவர்கள் உருவாகவில்லை. உடலுழைப்பிலும் உற்பத்தியிலும் ஈடுபட்ட சமூகங்களையும் ஜாதிகளையும் சேர்ந்தோர் புதிய தொழிலாளர் வர்க்கமாகத் தோன்றினர் எனக் கூறலாம். ஆனால், மோட்டார்த்தொழிலைக் கற்பித்த நிறுவனத்தில் ஓரிடத்தில் ஒன்றாய் அமர்ந்து கற்க வேண்டிய நிலை இருந்ததால் அதைக் கற்பித்த நிறுவனங்களில் “தீண்டத்தகாதோர்” எனக் கூறி ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் அனுமதிக்கப்பட்டனரா? அவர்கள் மோட்டார்த் தொழிலாளராக உருவாக முடிந்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக இச்சமூகங்களைச் சேர்ந்த சிலர் தொழிலாளர்களாக உருவாகினர் என ஊகிக்கலாம். இப்புதிய தொழிலாளர் வர்க்கம் நிலையான வருவாயைக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும் – கோ.ரகுபதி
விலை:350 /-
Buy this book online: https://www.heritager.in/product/the-making-of-transportation-and-the-transformation-of-caste/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/