உத்தரநல்லூர் நங்கை:
சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள் காட்டிய சாதி வேற்றுமைக்குக் கண்டனக்குரல் எழுப்பி பாய்ச்சலூர் பதிகம் என்ற பாடல்களை இயற்றியுள்ளார். பாய்ச்சலூர் பதிகம் என்பது நங்கையார் பதிகம் என்றும் அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. பாய்ச்சலூர் பதிகம் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. இதில் மொத்தம் 11 விருத்தப் பாடல்கள் (பதிகம் என்பதால் 10 பாடல்களும், அத்துடன் ஒரு காப்புச் செய்யுள் ஒன்றும்) உள்ளன.
இப்பதிகம் சாதீய அமைப்புக்கும் நால்வர்ணக் கொள்கைக்கும் எதிரான கருத்துகளை நேரடியான பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாகவே பதிவிடுவது இதன் தனிச்சிறப்பு. வேதியன் படைத்தவை சாதிகள் எனக் கூறி, சாதிகள் பிராமணர் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டவை என்று காட்டுகிறார் உத்தரநல்லூர் நங்கை. அந்தச் சாதிகளை நிலைநிறுத்தப் பிராமணர்கள் உருவாக்கிய சடங்குகள் வழி செய்கின்றன என்பதை இவர் பாடல்கள் விளக்குவதுடன் அவற்றை எதிர்த்துச் சடங்குகளையும் வேதத்தையும் சாடி. சமத்துவம் கோரி இவர் குரல் எழுப்புவதையும் பாடலில்தமிழின் முதல் தலித் இலக்கியம் என்று ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாகக் குறிக்கப்படும் பெருமையையும் பெற்றுள்ளது. பாய்ச்சலூர் பதிகம். மனிதர்களில் பேதம் பார்க்கிறீர்களே வேள்வி வளர்த்து நீங்கள் படிக்கும் மறையினால் என்ன பயன்? என்றும் தீயிலிட்டு எரிக்கப்படும் பலவகை மரங்கள் வெவ்வேறுவகை வாசனையைத் தரலாம், அது போல வெவ்வேறு சாதி மனிதர்களின் பிணங்கள் எரிபடும் பொழுது வெவ்வேறு வாசமா வீசுகிறது? என்ற சாடல்களுக்கு இன்றுவரையிலும் பதில் சொல்வார் இல்லை என்பதையே சாதிய வன்முறைகள் காட்டி வருகின்றன.
வழக்கம் போல சமயக் கருத்துகளைச் சாடும் நூல்கள் எதிர்கொள்ளும் முடிவையே இந்த நூலும் எட்டியுள்ளது. யாராலும் அதிகம் பேசப்படாமல், பெரும்பாலோர் அறிந்து கொள்ள வழியில்லாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இலக்கியங்களில் ஒன்று இது.
இவள் ஒரு பெண்கவி. பிராமணரை வசை பாடினாள் என்று அபிதான சிந்தாமணி தரும் குறிப்பு ஒன்றும்; இதிலிருந்து மூன்று பாடல்களை மட்டும் எடுத்து வெளியிட்டு உத்தரநல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்குக் காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை என்று 1916ல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை தரும் குறிப்பு ஒன்றும்; மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு நூலில் பதிகத்தின் உள்ள எட்டுப் பாடல் உள்ள தொகுப்பு ஆகியன மட்டுமே பாய்ச்சலூர் பதிகம் குறித்த இலக்கியவரலாற்றுச் செய்தியாக நாம் அறியக்கூடிய செய்திகள்.
பாதகர்களான பாய்ச்சலூர் பங்காளிகள் பதினொரு பேர் என்று அண்ணன்மார் சுவாமி கதை யில் பாய்ச்சலூர் குறித்து ஒரு செய்தி வருகிறது. சிவவாக்கியர் பாடலில் இடம்பெறும் பாய்ச்சலூர் என்ற சொல்லுக்குத் தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. பாய்ச்சலூர் பதிகம் குறிப்பிடும் பாய்ச்சலூர் என்ற கிராமம் திருச்சிக்கு அருகே உள்ளது; இல்லை.. இல்லை.. அது இருப்பது திருவண்ணாமலைக்கு அருகே, ஒட்டன்சத்திரம் பக்கமாக, பழனிக்குப் பக்கத்தில், கோடைக்கானலுக்கு அருகில், இல்லையில்லை அது கேரளாவில்
திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ளது என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இன்றும் கேரள பாய்ச்சலூர் கிராமத்தில், ஒடுக்கப்பட இனத்தவரான ஈழவ மக்கள் பாய்ச்சலூர் பதிகத்தை மலையாளத்தில் எழுதி வைத்துப்பாடுவதாக மாலன் தனது பெண்களில் ஒரு பெரியார் என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
புலவர் உத்திரநல்லூர் நங்கை குறித்த செய்தியொன்றை, மு. அருணாசலம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு நூல் குறிப்பிடுகிறது. ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் பறையர் குல பெண் உத்திரநல்லூர் நங்கையும், அங்கு மறையோதும் பார்ப்பன இளைஞன் ஒருவரும் காதலிக்கிறார்கள். அது குறித்து வெகுண்டெழும் பாய்ச்சலூர் கிராம மக்கள் அவளையும் அவளது சேரியையும் கொளுத்த வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ளும் உத்திரநல்லூர் நங்கை சாதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதாக பாய்ச்சலூர் பதிகம் அமைகிறது.
தமிழ் நாவலர் சரிதையும் மு. அருணாசலம் அவர்களின் நூலும் முழுமையாகப் பதிகத்தின் 11 பாடல்களையும் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் சென்னை வித்யாரத்நாகர அச்சுக்கூடம், 1923 இல் வெளியிட்ட பாய்ச்சலூர் பதிகம் பாடல்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. அச்சுப்பிழைகள் நீக்கப்பட்டுப் பாடல்களும் பதம் பிரிக்கப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள ஆங்கில எழுத்துக்கள் மு. அருணாசலம் அவர்களின் நூலில் காணும் பாடல்களில் இருந்து வேறுபடும் பிரதி பேதங்களைக் குறிக்கின்றன. (நூலிலிருந்து)
இலக்கிய மீளாய்வு – தேமொழி
விலை:150 /-
வெளியீடு:தமிழ் மரபு அறக்கட்டளை
Buy this book online: https://www.heritager.in/product/ilakkiya-meelaivu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers