முசுகுந்த வேளாளரின் திருமணச் சடங்கும் முழுச்சீர் செய்யும் முறையும் – ஓர் ஆய்வு – வே. விஜயா
“தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள வேளாளர்களில் ஒருவகையினர் தங்களை முசுகுந்த வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய பூர்வீகம் தொண்டைமண்டலம் என்று கூறப்பெறுகின்றது” (மு. அண்ணாமலை 1984:297).
கார்காத்த வேளாளர்கள் திருநெல்வேலி பகுதிகளில் சைவ வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் முசுகுந்த வேளாளர்களும் சைவமாக இருந்து பின் அசைவமாக மாறியுள்ளனர். இன்றும் இவர்களின் கிராமங்களுள் ஒன்றான தாமரங்கோட்டையில் ஒரு சில குடும்பங்களில் சைவம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வேளாளர் பெருமக்களின் பெருந்தெய்வமாக கைலாசநாதர் ஆலயம் விளங்குகிறது. 35 கிராமங்களில் அடங்கியுள்ள பகுதி முசுகுந்த நாடு என்று சுட்டப்படுகிறது. இந்த 32 கிராமங்களில் எந்த ஒரு இல்லத்திலும் சுப காரிய நிகழ்ச்சி நடைபெற்றாலும் அவ்விறைவனுக்குக் கால் பணமும் அழைப்பிதழும் வைப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
முசுகுந்த வேளாளர்கள் தங்கள் தொழிலான உழவுத்தொழிலை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். உழவுத்தொழிலைப் பெருமையாக நினைக்கும் இவர்கள் அதன் காரணமாகவே தங்கள் பெயருக்குப் பின்னால் வேளாளர் என்றே சேர்த்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக சின்னத்துரை என்று பெயர் சூட்டப்பட்டி ருப்பின் சின்னத்துரை வேளாளர் என்று அழைக்கின்றனர். இவ்வேளாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட 32 கிராமங்களுக்குள்ளேயே கொள்வினை, கொடுப்பினை வைத்துக் கொள்கின்றனர். தங்கள் சமூக அமைப்பைத் தவிர வேறு எந்த சாதி அமைப்பிலும் திருமண உறவு முறை வைத்துக் கொள்வதில்லை. சமுதாயக் கட்டுப்பாட்டை மீறித் திருமணம் செய்து கொள்பவர் களைச் சமூகத்தை விட்டு விலக்கி வைக்கின்றனர். சமூகக் கட்டுப்பாட்டை மீறுவதாக அவர்கள் எண்ணுகின்றனர். இனி அவர்களின் திருமணச் சடங்குமுறையைப் பற்றி ஆராய்வோம்.
மிஞ்சி அணிவித்தல்
மணமகளின் சகோதரி மணமகனை நிற்கவைத்து காலிலே மிஞ்சி போட வேண்டும். இதற்கு மணமகன் வீட்டார் பணம் செய்வது வழக்கம். புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பது இல்லை. மிஞ்சி அல்லது ‘மெட்டி’ என்பது வாழ்வின் பொறுப்புகளை மணமகனுக்கு உணர்த்துவது. குடும்பப் பொறுப்பு இன்றி ஊர் சுற்றும் இளைஞர்களுக்குக் கால் கட்டுபோட்டால் பொறுப்புணர்வு வந்துவிடும் என்பது நாட்டுப்புறமக்களின் பொதுவான கருத்தாகும்.
நூல்: வாழும் மரபுகள்
Rs. 150+50
Buy: https://www.heritager.in/product/vaazhum-marabugal/
Whatsapp: wa.me/919786068908