கண்ணகி ஏன் கற்புக்கரசி என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன யோசித்தால் சிலப்பதிகாரம் தெளிவான காரணம் கூறவில்லை. கதைப்பாடல்களில் இது கூறப்படுகிறது. கதைப்பாடல்கள் என்பன சிலம்பை விட பழமையான கூறுகளை உடையதாக வாய்மொழி இலக்கியங்கள் என்பது ஆய்வாளர்கள் கூற்று.
உண்மையில் கன்னகை சினத்துக்கு முதற் காரணம் கோவலனின் இறப்போ, பொய்யான தீர்ப்போ அல்ல. கோவலன் கதை என்ற நூலில் பாண்டிய மன்னன் கன்னைகயை பார்த்து தனது இரண்டாம் தாரம் என்று கூறியதே அவளின் கோபத்திற்கு காரணம் என்கிறது. மேலும் மன்னன் தானே சாகவில்லை, கன்னகை காளி தேவியாகி பாண்டிய மன்னனின் குடலை பிடிங்கி மாலையிட்டுக் கொண்டாள் என்கிறது. அவ்வாறு செய்தபோது தூக்கி எரிந்த சிலம்பு ஏற்பத்திய நெருப்பு அரண்மனையோடு மதுரையை எரிக்கத் துவங்கியது என்கிறார்.
“கோவலனைச் சிலம்பு திருடிய கள்வன் என்று ஆராவா கொன்றதற்குப் பழிவாங்கவே கன்னகை உண்மையை நிலை நிறுத்திக் காட்டி, மிஞ்சினத்தால் மதுரை மாநகரையும் எரித்தான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.
இக்கதைப்பாடல் கன்னகை கொண்ட மிகு சீனத்துக்கு வேறு ஒரு புதில காரணத்தைப் புகல்கின்றது.
கோவலனின் கொலைக்கு காரணமான வன்னித்தட்டானில் ஆலோசனையின்படி கன்னகையைப் பாண்டிய மன்னனின் தாரம் (மனைவி) என்று கூறத் தூண்டினான் பாண்டிய மன்னன் கன்னகையின் மாசறு கற்புநிலையை இழிவுபடுத்தும் இத்தகு ஒரு தூண்டுதல் அவள் பாண்டிய மன்னனின் குடலைப் பிடுக்க மாலையிடவும், மதுரையை எரியுண்ணச் செய்யவும் காரணமாகிறது. (22-2225 22-2250 மன்னனை உயிருடன் விட்டு விடுமாறு கொப்புலிங்கி கன்னகையிடம் முந்தியேத்தி மடிப்பிச்சை கேட்டபொழுதும், கன்னகை தன்னைத் தாரமாக வரும்படி மன்னன் கேட்டான் என்பதை வெளிப்படுத்தித் தன் சினத்துக்குக் காரணமும் நியாயமும் கூறினாள். பெற்ற தாய் நான்தான் என்று கொப்புலிங்கி எடுத்துரைத்த போதும் தன்னகையின் மனம் இரங்க பாண்டியனைக் கொன்று குடலைப்பிடுங்கி மாலையிட்டு குலவையிட்டாள் கன்னகை.” – நூலிலிருந்து
Rs. 250 + 50 shipping
Buy: https://www.heritager.in/product/kovalan-kathai/
WhatsApp order: wa.me/919786068908