கன்னட இலக்கிய காலம்:
கேசவ அல்லது கேசிராஜா இயற்றிய மிகப் பழமையான, உயர்வாகப் பாராட்டப்படுகிற இலக்கியக் கன்னடத்திற்கான இலக்கணம் ஆகிய ஸ்ப்த மணித பூர்பணம் (‘சொற்களின் அணியாகிய கண்ணாடி) வெளியான பின் கன்னட இலக்கியத்தின் பழமை குறித்துப் பல புதிய விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் பதிப்பாசிரியரான திரு கிட்டல் தனது முன்னுரையில் நூலின் ஆசிரியர் காலம் குறித்து இக்காலத்தவர் மனங்களில் இயற்கையாக எழும் பல்வகை வினாக்களுக்கு விடையாக விளக்கங்களை மிகக் கவனமாக தந்துள்ளார். கேசவர் ஒரு மணர், கன்னட இலக்கியத்தை உத்வேகத்துடன் வெற்றிப்பாதையில் முதலில் வளர்த்தவர்களும் சமணர்களே. அவர் எடுத்தாளும் கவிஞர்கள்
பலரும் சமணர்களே; வட இந்தியாவில் சமண இலக்கியங்களின் தோற்றம் கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பது உண்மை என்றால், மிகத் தொலைவில் இருக்கும் கன்னட நாட்டில் அந்த தோன்றுவதற்கு மேலும் சில நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். பதினொருவரைப் குறிப்பிட்டுள்ளனர்.
கேசவர் கவிதைக் கலையின் முன்னோடியாக பெயரிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார். வேறு சிலரும் அனைவரையும் அடிக்கடி ‘பண்டைக் கவிஞர்கள்” அவர்கள் அனைவரைல்லாம் குறிப்பிடுகிறார். சில நூல்கள் பழன் கன்னடத்தில்’ எழுதப்பட்டிருப்பதாக அவர் கூறினாலும், தான் கையாண்ட மொழியை அடை எதுவும் இல்லாமல், கன்னடம் என்றே அழைக்கிறார்; ஆனால் அவருடைய மொழியை இன்று பழங் கன்னடம் என்றே கூறுகின்றனர் தமிழிலும் மலையாளத்திலும் வழங்குகிற சிறப்பு ஒலியான ‘ழ’கரம் கன்னடத்தில் மறையத் தொடங்குகிறது, [அதை உறுதிபடுத்துவது போல்] அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்குச் சில விதிகள் தருகிறார். ஆனால் அதே சமயத்தில் வல்லோசையான ‘ற’கரத்தின் பயன்பாட்டிற்கு, அது கன்னடத்தில் மறைய இருக்கிறது, அவர் எந்த விதியையும் தரவில்லை. இந்த ‘ற’கரம் தமிழிலும் மலையாளத்திலும் இன்றுவரை வழங்குகிறது. தெலுகில் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. நீலகிரி மலையில் வாழும் படகர்களின் – மூல கன்னடத்திலிருந்து வெகு காலத்திற்கு முன்பே பிரிந்துவிட்ட கன்னடக் குடியேற்றத்தினர் இவர்கள் – வடுகு மொழியில் இவ்விரு ஒலிகளும் வழங்குகிற கன்னடத்துப் பழைய வட்டார மொழியைப் பேசுகின்றனர். இந்தப் பின்னணிகள் கேசவரின் காலத்தைக் கி.பி.1000 வரை கொண்டுவருகின்றன.
இந்தக் காலத்தை மேலும் உறுதிசெய்கிறது கேசவர் எடுத்தாளும் ஒரு கவிஞரின் மேற்கோள் “தைலப்பாவின் சுடர்விடும் வாள்”. தைலப்பா சாளுக்கிய அரச குலத்தைச் சேர்ந்தவர்; கி.பி.800லிருந்து 1189 வரை கல்யாணத்திலிருந்து ஆண்ட இந்த அரச குலம் பின்னர் மறைந்து போயிற்று. இங்குக் குறிப்பிடப்படும் தைலப்பா (போரிட்டுவந்த இரண்டாம் தைலப்பாவாக இருக்கலாம்) இந்த அரச குலத்தை கி.பி.973இல் மீட்டெடுத்தார். கேசவர் கி.பி.1369இல் எழுதப்பட்டதாகத் தெரிகிற பஸவபுராணத்தைக் குறிப்பிடவில்லை ஆதலால் அதற்கு முன்பே வாழ்ந்திருந்திருக்க வேண்டும். கி.பி.1637இல் எழுதப்பட்ட ஒரு நூலில் இவரின் பெயர் குறிப்பிடப்படுவதுடன் புகழ்பெற்ற ஆசிரியராகவும் குறிக்கப்பட்டுள்ளார்.
கேசவர் இயற்றுவதற்கு முன்பே ஹரிவம்சம் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; கேசவர் தனது விதிகளுக்கு மேற்கோளாக எடுத்தாளும் நூல்களின் ஆசிரியர்கள்மகாபாரதம் மற்றும் இராமாயணக் கதைகளின் நிகழ்ச்சிகளையும் கதாப்பாத்திரங்களையும் நன்கு அறிந்திருந்தவர்களாக இருப்பினும் இவை அந்தக் காலத்தில் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கையில், சிறப்பாகத் தைலப்பாவைச் சுட்டும் குறிப்பிலிருந்து திரு கிட்டல், அவர் கி.பி.1170 வாக்கில் வாழ்ந்திருக்கலாம் என்று முடிவு செய்கிறார். இதே காலத்தில்தான் தமிழ் நாட்டில் பெரும் இலக்கிய வளர்ச்சி இருந்தது என்பதையும் நாம் பார்க்கிறோம், கேசவர் எழுதத் தொடங்கிய காலத்தில் “சமஸ்கிருதச் சொற்கள் தத்சம அல்லது தத்பவச் சொற்களாக நிலை வழக்குப் பெற்று, நமது காலத்தில் ஏற்றுக்கொண்ட அதே அளவிற்கு, கன்னட மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.” கேசவரின் படைப்பு இன்றளவும், இன்றைய கன்னடத்தின் எல்லா நயங்களுக்கும் உயர்தரமாகவே உள்ளது. மொழியில் அடிப்படையான கூறுகள் எதுவும் மாறிடவில்லை. திரு கிட்டல் கேசவரைக் குறித்தும் அவரது காலத்தைக் குறித்தும் எழுதித் தொடர்ந்து பொதுவாகக் கன்னட இலக்கியத்தை நான்கு தலைப்புகளில் – ஜைன. லிங்காயுத, சைவ, வைணவத் தலைப்புகளில் – Indian Antiquary இல் ஜனவரி 1875 இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம் – பா.ரா.சுப்பிரமணியன்
Buy this book online: https://www.heritager.in/product/drivida-allathu-thennindiya-kudumba-mozhikalin-oppilakkanam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/