இரண்டாம் உலக யுத்தம் மக்களுக்கு அளவற்ற துக்கத்தையும் சுமைகளையும் இழப்புகளையும் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருட் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும் கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. மனித மேதமையின் ஏராளமான மாபெரும் படைப்புகள் மறைந்துபோயின. பல லட்சக்கனக்கான மக்கள் காயங்கள். நோய் நொடிகள். பட்டினியால் வாடினர்.
இந்நூலில் திட்டவட்டமான உதாரணங்களில், புதிய, அதிகம் அறியப் படாத பத்திராலய ஆவணங்கள், சோவியத் மற்றும் அயல்நாட்டு அரசியல் பிரமுகர்கள், இராணுவ நிபுணர்களின் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன. இராணுவ அரசியல் முடிவுகள் தரப்பட்டுள்ளன.