தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும், வேறுபட்ட உள்ளுர்க் கலைஞர்களும் அய்ரோப்பியர்களின் பார்வையில் (கி.பி 1514-1845)
எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
இந்த நூல் அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்ளூர்க் கலைஞர்கள் பற்றி விவரிக்கிறது. கல், செங்கல், சுண்ணச்சாந்து மற்றும் கட்டடத் தொழில்நுட்பம் குறித்தும், மரக்கட்டை, தச்சர், கடலோடிகளின் கப்பல் மற்றும் படகுக் கட்டும் தொழில், பாய்மரக் காலத்தில் கடல்சார் தொழில்நுட்பம் பற்றியும் விளக்குகிறது.
இந்த நூல் அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்ளூர்க் கலைஞர்கள் பற்றி விவரிக்கிறது. கல். செங்கல். சுண்ணச்சாந்து மற்றும் கட்டடத் தொழில்நுட்பம் குறித்தும், மரக்கட்டை தச்சர், கடலோடிகளின் கப்பல் மற்றும் படகுக் கட்டும் தொழில், பாய்மரக் காலத்தில் கடல்சார்
தொழில்நுட்பம் பற்றியும் விளக்குகிறது. உலோகங்கள் சுரங்கங்கள், கொல்லர்களின் இரும்பு மற்றும் எஃகு பெரிதும் உருமாறும் தொழில்நுட்டம், பீரங்கி, பீராங்கிக்குண்டுகள், வெடிமருந்து, துப்பாக்கிகள், போர்ஏவுகணைகள் மற்றும் போர்ப்படைத் தொழில் நுட்பம் விரிவாக அலசப்பட்டுள்ளது.
அய்ரோப்பாவிலிருந்து தமிழகக் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்ட கடலோடியின் திசைகாட்டி, இரட்டைத் தொலைநோக்கி, நுண்ணோக்கி, மணல்கடிகாரங்கள் சுவர்க்கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள், மெழுகுவர்த்தி, நிறப்பிரிகை, உலகக்கோளங்கள், பொழுதுமாற்றங்காட்டி, வெப்பநிலைமானி, காற்றழுத்தமானி மற்றும்
மின் எந்திரம் போன்ற ஆர்வமூட்டக்கூடிய கருவிகளின் பயணம் மற்றும்
தாக்கம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. தாள். அச்சகம். காற்றாலை, கண்ணாடி மற்றும் நிலப்படம் தயாரித்தல் போன்ற அய்ரோப்பியத் தொழில்நுட்ப அறிமுகத்தால் இடைக்காலத்திலிருந்து காலனிய ஆட்சிக்கு மாறுவதைப்பற்றியும், காலனியப் பேரரசை விரிவடையச் செய்தது பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
Reviews
There are no reviews yet.