Description
தமிழகத்தில் அர்ச்சுனன் தபசு தெருக் கூத்தாகவும், மேடைக் கூத்தாகவும், நாடகமாகவும் பல இடங்களிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், அர்ச்சுனன் தபசுக் கூத்து மலையகத்தில் மட்டுமே மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. மலையகத் தோட்டப் பகுதிகளில் ஆடப்படுகின்ற அர்ச்சுனன் தபசு இலங்கைக்கு வந்தவற்றையும், அர்ச்சுனன் தபசு அவைக்காற்றப்படும் முறையையும், அதன் நாடகக் கட்டமைப்பு, இசையமைப்பு என்பவற்றையும், அர்ச்சுனன் தபசினுாடாகப் புலப்படுத்தப்படும் மக்கள் வாழ்வியல் அம்சங்கள், சுவைகள் என்பவற்றையும் ஆய்வதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.