இராஜராஜேச்சரம்-குடவாயில் பாலசுப்ரமணியம்

950

Add to Wishlist
Add to Wishlist

Description

இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல். இந்நூல் ஒன்பது பகுதிகளையும், பின்னிணைப்பும் கொண்டு அமைந்துள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலைப் பற்றிய இந்நூலில் தஞ்சாவூர், இராஜராஜ சோழன், கோயிலின் தத்துவங்கள், சிற்பங்கள், இசை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றி வரலாற்று நோக்கில் இலக்கிய ஆதாரங்களோடும், கல்வெட்டு ஆதாரங்களோடும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கோயிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிய விவரங்களும் உள்ளன. பின்னிணைப்பில் கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா, கருவூர்ப் புராணம் ஆகியவை உரையுடன் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தார அறையின் சுவரில் சோழர் கால பிரெஸ்கோ ஓவியங்கள் [1] இருப்பதை 1931இல் கண்டு உலகுக்கு அறிவித்த பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது

Additional information

Weight0.5 kg