இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் – பி.ஏ.காதர்

Add to Wishlist
Add to Wishlist

Description

இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் பி.ஏ.காதர்

மலையகத் தமிழர் வரலாறு 

லங்கையின் ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசப்படும் அளவுக்கு

மலையகத் தமிழர்கள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்களிலேயே மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் மலையகத் தமிழர்கள்தாம் என்று கூறப்படுவது உண்டு. இலங்கையில் இருக்கும் பிரஜா உரிமைச் சட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். 1911ஆம் ஆண்டில் இவர்களை ‘இந்தியத் தமிழர்கள்’ என்று இலங்கை அரசு சட்டபூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால் இலங்கைத் தமிழர்கள் என்கிற உரிமையை இழந்து, ‘இந்தியாவிலிருந்து கூலிக்கு வந்தவர்கள். இவர்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை’ என்கிற நிலை உருவாகிவிட்டது. இன்றளவும் கிட்டத்தட்ட அதே நிலைதான். 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல், இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இது ஒரு இனக் குழுவைக் குறித்த வரலாற்று ஆவணம் எனலாம்.

எஸ்.சுஜாதா