எந்த நாட்டு முஸ்லிம் ஆட்சியும் அந்நாட்டு மக்களை வன்முறையால் முஸ்லிம்களாக்க முனையவில்லை. அப்படி முயன்றிருந்தால் முஸ்லிம் நாடுகளில் இக்காலத்திலும் முஸ்லிம் அல்லாதார் வாழ்ந்திருக்க முடியாது. நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
“(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை” (2: 256)
“(நபியே!)நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது”.( 50 :45)
இவை இஸ்லாமிய வேதத்தின் வசனங்களாகும். தம் வேதவாக்கை மீறி எந்த முஸ்லிமும் இஸ்லாத்தைப் பிறர் மீது திணிக்கத் துணிய மாட்டார்.
உலக நாடுகள் அனைத்திலும் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்பதை ஆதாரப்பூர்வமாக இந் நூலாசிரியர் விளக்குகிறார்.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தையான இந்நூலாசிரியர் மஹதி, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இதழ்களில் கதை, புதினம் ,கட்டுரை என்று எழுதிக் குவித்த இவர் முதுபெரும் எழுத்தாளர் என்ற பாராட்டைப் பெற்றவர் . மறைந்து கிடந்த தமிழக இஸ்லாமிய வரலாற்றுப் புதையலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தவர்).