மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான்.
ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக்க, உயிர்த் தியாகம் செய்யவும் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டவன். ஒவ்வொரு படையையும் திறம்பட நடத்தி சென்றவன் சிறந்த போர் தளபதியாக விளங்கினான் அவ்வாறு உலகப் புகழ்பெற்ற போர்த் தளபதிகள்
அட்டில்லா,
மாவீரன் அலெக்சாண்டர்,
ஆலிவர் குரோம்வெல்,
பிஸ்மார்க்,
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்,
திப்பு சுல்தான்,
சந்திரகுப்த மெளரியர்,
சைமன் பொலிவார்,
நெப்போலியன்,
மார்ஷல் டிட்டோ,
முஸ்தபா கமால் பாஷா,
வேலு நாச்சியார்,
ஜான்சி ராணி லட்சுமி பாய்,
ஜல்காரிபாய்,
ஜார்ஜ் வாஷிங்டன்,
ஜோன் ஆஃப் ஆர்க்,
ஜோசப் கரிபால்டி,
ஜூலியஸ் சீசர்,
ஹனிபால்,
ஹோ-சி-மின்,
ஹோரஷியோ நெல்சன்,
ஹைதர் அலி,
ஆகிய போர்க்கள தளபதிகளின் வீர வரலாற்றின் சுருக்கத்தை இந்நூல் கூறுகிறது.