உ. வே. சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும்

750

பழந்தமிழ் இலக்கியங்களைப் பொருள் சிதைவின்றிப் பயிலுதற்கு இந்த நூல் பெரிதும் உதவியாக அமையும். இலக்கியங்களைத் தெளிவாகப் பயின்ற நிலையில், அவற்றின் படைப்பாளிகளின் புலமைத் திறத்தையும் தமிழ் மொழியின் சொல்வளத்தோடு, பொருளை உணர்த்துதலில் உள்ள ஆழமான வன்மையினையும் இந்நூலால் அறிய இயலும்; தமிழ் இலக்கியங்களின் கவிதைத் தன்மை, பாடுபொருள் ஆகியவற்றில் ஒடுங்கிக் கிடக்கிற செவ்வியற் பண்புகளை உணர்தற்கும் பெரிதும் பயன்படும். செம்மொழி எனும் தகுதிப் புலப்பாட்டிற்கு ஒரு சீரிய கருவியாக இது அமையும். மொழி, இலக்கிய மாணாக்கர்களுக்கும் இஃது இன்றியமையாத ஒன்றாகும். வரலாற்றுமுறைத் தமிழிலக்கண ஆய்விற்கும் இந்நூல் பயன்படும்.

உ.வே.சா. அவர்கள் மேற்கொண்ட முறையியல் (Methodology) சிதையாது இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. சாமிநாதையரின் அகராதியியற் கொள்கை பற்றிச் சிறப்பான ஆய்வினை மேற்கொள்ளுதற்கு இந்த இலக்கிய அரும்பத அகராதியும், சங்கநூற் சொல்லடைவும் முதன்மைத் தரவாகப் பயன்படும்.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight1 kg