கதைகளை மறைத்தலும் கதைகளுக்குள் மறைதலும்

320

Description

“உண்மையில் எழுதத் தொடங்கும் முன்பே தடை தொடங்கி  விடுகிறது. எழுத்தின் வகைமையை, மொழியை, சொல்லாடல் களத்தைத் தேர்ந்தெடுக்கும் போதே ஓர் எழுத்தாளர் தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். விலக்குகள் அல்லது அரவணைப்பு தடை அல்லது தகவமைப்பு ஏதோ ஒன்றைப் பற்றிய தேர்ந்தெடுப்பு. இதற்குள் அவர் தன் வாழ்க்கையை வாழ்முறையை நகர்த்திச் செல்ல வேண்டியதுதான்.

எழுத்தின் வகைமைகளே சிந்தனை மற்றும் படைப்பாற்றலின் வடிவத்தைத் தீர்மானித்துவிடுகின்றன. இங்கு ஏதும் மீறல் நடைபெறும் போது புறக்கணிப்பும் மறுதலிப்பும் நிகழும். இது பெரும் தடைகளுக்கான சிறு வடிவத் தடை. ஏற்கப்பட்ட வன்முறை, இதை தனியராய் யாரும் எதிர் கொள்ள முடியவில்லை

Additional information

Weight0.250 kg