Description
கருஞ்சட்டைப் பெண்கள் என்ற இப்புத்தகம் திராவிடர் இயக்க வீராங்கனைகளின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைப் பேசுகிறது. வீட்டை விட்டுப் பெண்கள் வெளியில் வரவே தயங்கிய கால கட்டத்தில் அவர்களைப் பொது மேடைகளிலும், போராட்டங்களிலும் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு பெரும் புரட்சியை இம்மண்ணில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். பெரியாரின் ஆணையை ஏற்றுக் களத்தில் நின்ற வீராங்கனைகளின் படை வரிசை மிக நீளமானது. அவர்களுள் சிலரை இப்புத்தகம் அறிமுகப் படுத்துகிறது. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவர் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.