தமிழ்மொழியின் எழுத்து வடிவங்கள் காலந்தோறும் பல மாற்றங்களைப் பெற்று இன்று நாம் எழுதும் நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் காணப்படும் கல்வெட்டுகள் பிராமி எழுத்தில் அமைந்துள்ளன என்கின்றனர். அவ்வெழுத்தே பல்வேறு மாற்றங்களுக்குப்பின் இன்றைய நிலையை அடைந்துள்ளன எனக் கல்வெட்டறிஞர்கள் கருதுகின்றனர். அந்த எழுத்துகளைப் பிராமி, தமிழி, தமிழ்பிராமி என்றெல்லாம் அழைத்தனர். இவ்வகையான எழுத்துகள் சம்பை, தொண்டூர், சித்தன்னவாசல், புகழுர், மாமண்டூர், மாறுகால்தலை ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்கின்றனர்.]
தமிழ் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தமிழ் எழுத்து என்னும் எழுத்துகள் தோன்றின என்பது மற்றொரு கருத்து. அந்த எழுத்துகளை ஆய்வு செய்து சங்க இலக்கியங்களை நூல் வடிவமாக்கியவர் உ.வே.சா.அவர்கள். பல்வேறு கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து அவை இடம்பெற்ற ஆவணங்கள், சுவடிகள் ஆகியவற்றைத் தொகுத்து கல்வெட்டெழுத்து ஆவணங்களும் சுவடிகளும் என்னும் இந்த நூல் உருவாகியுள்ளது.