இலங்கையில் ‘கள்ளத்தோணி’ என்கிற கருத்தாக்கம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தின் பிரபலமான சொல்லாடலாக ஜனரஞ்சகமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகமாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவருமே கள்ளத்தோணிகள் என்கிற நம்பிக்கை இன்றும் பல சிங்கள வர்களிடையே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் கூட ‘மரக்கலயா’ என்று அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் ‘மரக் களங்களில் வந்த அந்நியரே’ என்பது தான்.
சிங்கள மொழியைச் சேர்ந்தவர்கள் திட்டுவதற்கும், அவதூறு செய்வதற்கும், இலங்கை ஒரு தீவு என்கிற ரீதியில் இந்த கள்ளத்தோணி கருத்தாக்கத்துக்கான வழிகளை திறந்தே வைத்திருக்கிறது.