Description
ஒருபுறம், காலனிய மக்கள் அழிக்கப்படுகின்றனர். அவர்களின் இயற்கை வளங்களும் மனிதார்த்த வளங்களும் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அவர்களின் வழக்காறுகள், மரபுகள் உள்ளிருந்து குலைக்கப்படுகின்றன அல்லது நிர்மூலமாக்கப்படுகின்றன. மறுபுறம், இனவியல் மேட்டிமை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆணவம், பொருளாசை, சுகவெறி, வதைநாட்டம் முதலியவற்றால் காலனியவாதிகளும் அழிக்கப்படுகின்றனர். உந்திச் செலுத்தப்படும் வாழ்க்கை முறையைத் தவிர்க்க முடியாமல் சார்ந்து நின்று மானுடத்துவம் அறவே இழந்து பூரண வக்கிரர், வக்கிர பூரணர் ஆகின்றனர். மேலும், காலனிய நோய், பாதகம், சிதைப்பு, நாடகத்திற்கு முறையே மருந்தும் பரிகாரமும் புத்துருவாக்கமும் இன்பியல் முடிவும் கண்டடைதல் இரு தரப்பினரின் கூட்டியக்கத்தால் மட்டுமே இயலும் என்று தீர்வு கூறி வெற்றரசியல் முழக்கக் கொச்சைகள் தவிர்த்த அணுகுமுறையைச் சுட்டுகிறார் மெம்மி.