தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப் பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப் பூர்வமான திசைகாட்டியாகவும் திறந்த விவாதத்திற்கான அழைப் பாகவும் இருக்கிறது.