கோயில் கலையும் சமூக வரலாறும் – திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் – ஆ. துளசேந்திரன்

150

Add to Wishlist
Add to Wishlist

Description

கோயில் கலையும் சமூக வரலாறும் -ஆ. துளசேந்திரன்

சுந்தர தாண்டவ வரலாறு :

தவம் சிறக்கத் தகுந்த காலம் திருத்துறைப்பூண்டி எனத் தேர்ந்து அகத்தியர் வாம தேவர், காசிபர், அத்திரி, பரத்துவாசர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கனி, வசிட்டர் முதலான் ஒன்பது முனிவர்கள் இங்கு வந்து ஒவ்வொருவரும் தனித்தனி தீர்த்தம் (நவ தீர்த்தம்) உண்டாக்கி சிவலிங்கப் பிரதிட்டை செய்து சாயுச்சிய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் உருத்திர பாசுபதம் எனும் யாகம் செய்தனர்.

இறைவன் அவர்கள் முன் தோன்றி சந்திர சூடாமணி எனும் சுந்தர தாண்டவத்தைச் செய்தருளி அதைத் தரிசித்ததால் அவர்களுக்கு சாயுச்சிய பதமும் ஈந்தருளினார்.

அவர்கள் வேண்டுகோளின்படி சித்திரை மாதம் சுக்கிலபட்சம் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் மதியம் நவ தீர்த்தத்தில் மூழ்கி சந்திர சூடாமணித் தாண்டவரைத் தரிசித்தவர்கட்கு சாயுச்சியமளிக்க இறைவன் சந்திர சூடாமணித் தாண்டவராக அமர்ந்தருளானார்.

நவக்கிரகங்கள் வழிபட்டு வரம் பெறல் :

ஊழிக் காலத்திலும் அழியா திருத்த வில்வ வனத்தையும் வில்வ வனநாதரையும் சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள் கண்டு வணங்கி வரம் பெற்றதால் நவக்கிரகபுரம் என்றும் இக்கோயில் அழைக்கப்பெறுகிறது. இக்கோயிலில் அவர்கள் தோற்றுவித்த தீர்த்தம் நவக்கிரக தீர்த்தம் ஆகும்.

திருவைந்தெழுத்தின் பெருமை :

அனைவரையும் உய்விக்கும் நமசிவாய என்ற திருவைந்தெழுத்தைப் பிறவி மருந்தீசர் கோயிலிலும், தெட்சிணாமூர்த்தி சன்னதியிலும், பெரியநாயகி கோயிலிலும், மாங்கல்ய தீர்த்தக் கரையிலும் பக்தியுடன் ஜெபித்தால் மந்திர சக்தி உண்டாகும்.

 

Additional information

Weight 0.3 kg