Description
சங்க காலக் கடற்கரையோரக் குடியிருப்புகளும் துறைமுகங்களும் (கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை) எனும் தலைப்பில் அமைந்த இந்நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக சங்க கால வணிகம், சங்க காலத் துறைமுகங்கள், அயலவர் குறிப்பிடும் ‘அர்கெரு’ ஒரு பார்வை, கன்னியாகுமரி – இராமேஸ்வரம் களப்பணியும் ஆய்வு முடிவுகளும் ஆகிய தலைப்புகளின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை மேற்கொண்ட களப்பணியில் கிடைக்கப்பெற்ற ஆய்வுத் தரவுகள் பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்விலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள சங்க காலத் துறைமுகங்கள், ‘அர்கெரு’வின் அமைவிடம், களப்பணி மேற்கொள்ளப்பட்ட ஊர்களும் அமைவிடக் குறிப்புகளும், களப்பணி மேற்கொண்ட ஊர்களின் வரைபடங்கள், களப்பணி ஒளிப்படங்கள் ஆகியன இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன. பழந்தமிழர்களின் வணிகம், கடல்வழிகள், துறைமுகங்கள் போன்றவற்றை அறிய விழையும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரும் பயனளிக்கும்.