Sale!

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்) – ராஜ் கௌதமன்

Original price was: ₹140.Current price is: ₹133.

அந்தக் காலத்தில் உடலால் கூட்டாக உழைத்து மலை, காடு, கடல், வயல் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க்குடிகளின் மூலத் தமிழ்ப் பண்பாடு எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

Add to Wishlist
Add to Wishlist

Description

“இந்த நூல் மூன்று பாகங்களாக உள்ளன. முதல் பாகத்தில் அந்தக் காலத்தில் உடலால் கூட்டாக உழைத்து மலை, காடு, கடல், வயல் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க்குடிகளின் மூலத் தமிழ்ப் பண்பாடு எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
இரண்டாம் பாகத்தில், வேளாண்மை நாகரிகமும் முடியாட்சியும் பரவிய மையப் பகுதியில் வாழ்ந்த ஆதிக்கத் தமிழ் மக்கள் பண்பாட்டில், வட ஆரிய – பார்ப்பன – வைதீகப் பண்பாட்டின் ஊடுருவல்கள் சான்றுகளோடு எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இடையிடையே தலித் ஆண், பெண்களுக்கிடையே உரையாடல் வடிவில் பழங்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலுள்ள தொடர்புகள் தலித் மொழியில் விவாதிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பாகத்தில், தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணைப் பற்றிய கருத்துக்கள் பெண்ணியப் பார்வையிலும் தலித் பார்வையிலும் விமர்சிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே சமகாலச் சிக்கல்களை மையமாகக் கொண்டே விவாதிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களே இங்கு விமர்சிக்கப் படுகின்றனவேயொழிய தனிப்பட்ட மனிதர்கள் அல்லர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். வரலாற்றில் தலித்துச் சாதியினர்க்கும் பெண்களுக்கும் அழிவையும், அவமதிப்பையும் கொண்டுவந்த சக்தி களைப் புகழ்ந்து கொண்டிருக்க முடியாது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும்.”
– நூலிலிருந்து
தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)
ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Additional information

Weight0.25 kg