தேனி மாவட்ட நடுகற்கள் – முனைவர் சி. மாணிக்கராஜ்

Original price was: ₹600.Current price is: ₹550.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழுக்கு செம்மொழி தகுதியினை தமிழக வரலாற்றிற்கு மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பையும், புகழையும் பெற்றுத் தந்தது, தேனீ மாவட்டம் ‘புலிமான்கோம்பை’ என்ற ஊரில் கிடைத்த ‘தமிழ் எழுத்து’ பொறிக்கப்பட்ட நடுகற்கள் தான்.  தமிழகத்தில் காலத்தால் மீகவும் தொன்மையான உருவமில்லா எழுத்துடைய நடுகற்கள் எனும் சிறப்பை பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ‘ஆகோள் பூசல்கள்’ பற்றிய வரலாற்றுச் செய்திக்கான நேரடி சான்றாகவும், தொன்மையான சான்றுகளில் முதன்மையான ‘புலிமான் கோம்பை நடுகற்கள் விளங்குகின்றன.

வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ள தேனி மாவட்டத்தில், இந்நடுகற்கள் மட்டுமின்றி  இன்னும் பல தொன்மையான நடுகற்கள் மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் தன்னுள் உள்ளடக்கி காலத்தால் அழியாமல் இன்றும் நின்று கொண்டு தான் இருக்கின்றன. இது போன்ற தொல்லியல் சான்றுகளை தொகுத்து ஆய்வு செய்து தேனி மாவட்ட நடுகற்கள் என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளேன். இம்மாவட்டத்திலுள்ள நடுகற்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இதுவே முதல் ஆய்வு நூலாகும்.

உள்ளடக்கம்

  1. நடுகற்கள்
  2. நடுகல் என்பது
  3. நடுகற்களின் அமைப்பு
  4. நடுகற்களில் வீரசுவர்க்க காட்சிகள்
  5. நடுகல் எடுக்கும் முறை
  6. நடுகல் எடுத்தவர்கள்
  7. நடுகல் எடுக்கப்பட்டவர்கள்
  8. நடுகற்களின் வகைகள்
  9. ஆறிரை மீட்ட அல்லது கவர்ந்த வீரன் நடுகல்
  10. ஊர்காத்தான்,நாடுகாத்தான் நடுகல்
  11. மானம் காத்தவீரன் நடுகல்
  12. ஏரிகாத்தான் நடுகல்
  13. கோட்டைகாத்தான் நடுகல்
  14. கோயில் காத்தான் நடுகல்
  15. ஏறு தழுவுதல் வீரன் நடுகல்
  16. புலி குத்திப்பட்டான் கல்
  17. யானைக் குத்திப்பட்டான் கல்
  18. பன்றிக் குத்திப்பட்டான் கல்
  19. குதிரைக் குத்திப்பட்டான் கல்
  20. நாய்க்கு நடுகல்
  21. சேவக் கோழிநடுகல்
  22. மான் குத்திப்பட்டான் நடுகல்
  23. பாம்பு கொத்திப்பட்டன் கல்
  24. புலி குத்திப்பட்டான் நினைவுக் கல்வெட்டு
  25. வில்லியர் நடுகல்,
  26. வீரக்கல்
  27. யானை குத்திப்பட்டாள் கல்
  28. பாம்பு கொத்திப்பட்டான் கல்
  29. மாலையம்மன் நடுகல்
  30. உத்தமபாளையம் தாலுகா நடுகற்கள்
  31. அண்ணன்மார் நடுகல்
  32. ஆநிரைகவர்தல் அல்லது மீட்டல் நடுகல்
  33. காவல் வீரன் நடுகள்
  34. புலி குத்திப்பட்டான் கல்
  35. கோம்பை நடுகற்கள்
  36. பண்ணைப்புரம் நினைவுத் தூண்
  37. காத்தப்பன் சதிக்கல்
  38. வேட்டைவீரன் நடுகல்
  39. சகோதரர்கள் நடுகல்
  40. துப்பாக்கிவீரன் நடுகல்
  41. மாலையம்மன் நினைவுத்தூண்
  42. சதிக்கல்
  43. காமாட்சிபுரம் சதிக்கல்
  44. கரியக்குடும்பன் நடுகற்கள்
  45. மாலையம்மன் நினைவுத்தூண்
  46. விடையன் நடுகல்
  47. ஏறுதழுவுதல் நடுகல்
  48. வாள் வீரன் நடுகல்
  49. குமணன் சிக்கயன் நடுகல்
  50. நெல்லுக்குத்தி அம்மன் சதிக்கல்
  51. கலைச் சொல் விளக்கம்
Weight0.4 kg