Description
குடவாயில் பாலசுப்ரமணியன் அன்னம் பதிப்பகம் உங்கள் நூல்களைப் பற்றிச் சொல்லுங்கள்?நீங்கள் எழுதிய நூல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது? நான் இதுவரை 30 பெருநூல்களையும்,23 சிறுநூல்களையும்,ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த நூலாக ‘நந்திபுரம்’ நூலைக் குறிப்பிடுவேன். பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் – நீலகண்ட சாஸ்திரி உட்பட – பழையாறை அருகில் இருப்பதே நந்திபுரம் என்று சொன்னார்கள்.பழையாறை அருகிலும் வேதாரண்யம் அருகிலும் நந்திபுரம் என்ற ஊர்கள் இருப்பினும், அரண்மனையும்,ஆயிரம் சிவலிங்கங்களோடு உள்ள நந்திபுரம் என்பது கண்டியூருக்குக் கிழக்கே உள்ளது தான் எனபதை மிகத்தெளிவாகக் கல்வெட்டுகளின் மூலம் கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்.







