பேராசிரியர் ஆசிவசுப்பிரமணியன் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’ என்னும் இந்த நூல் வாயிலாகப் பண்பாடுசார் ஆய்வுச் சமூகத்துக்குப் புதிய கண்களைத் திறந்து விட்டுள்ளார் என்றால் மிகையாகாது. மேலும் பல திறப்புக்களைத் திறனுடை ஆய்வாளர்கள் பெற்றுக் கொள்வதற்கான மடைகளையும் திறந்து காட்டியிருக்கிறார்.
பேராசிரியர் அவர்கள் முன்னோர் வழிபாட்டினைச் சமூகம், தொன்மைச் சமயம். வழிபாடு என்று இயல்பாகப் புரிந்து கொள்வதைத் தாண்டி, அதனை ஒரு “பிரபஞ்சவிய இயக்க ஒழுங்கு முழுமை’ என்பதாக விளக்க முற்பட்டிருக்கிறார். நடப்புக் காலம் கடந்து போன காலத்தைத் தமது நினைவடுக்குகளின் வழித்
தொடர்ந்து சுமந்து வருவதன் வெளிப்பாடாகவே முன்னோர் வழிபாடு இருக்கிறது. இது தொல் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் வேறு பல தொல்லெச்சங்கள்
வாயிலாகவும் புலனாவதைப் பேராசிரியர் பல்வேறு சான்றுகள் காட்டி விளக்கீச்
செல்கிறார்.
ச. பிலவேந்திரன் இணைப்பேராசிரியர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி.