பாஜக எப்படி வெல்கிறது?

350

Add to Wishlist
Add to Wishlist

Description

மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சி எப்படியுள்ளது? அனைத்திற்கும் மேலாக, அமித்ஷாவின் திறன்வாய்ந்த தேர்தல் கணக்குகள் பீகாரில் ஏன் தோல்வியடைந்தன?

பாஜகவை சேர்ந்தவர்கள், ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள், அனுபவம் மிக்க கருத்துரையாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் உரையாடியும்,

இந்தியாவின் மாபெரும் மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விரிவான செய்தியறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பாஜகவின் வல்லமைமிக்க தேர்தல் இயந்திரத்தினை நிபுணத்துவத்தோடும் நுண்ணறிவுத்திறத்தோடும் கூராய்வு செய்துள்ள இந்நூலின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, இக்கேள்விகளுக்கான விடைகளைக் கூறியதோடல்லாமல் அதற்கு மேலும் கூட விவரித்துள்ளார்.

தேர்தல் போர்களின் போது களமுனையில் இருந்து பணியாற்றியவர்களிடமிருந்தும், யுத்தியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட அரிய  ட்பமான செய்திகள் வெகு சாதுர்யமாக ஆராயப்பட்டிருக்கும் “பாஜக ஜெயிக்கும் கதை” எனும் இந்நூல், இந்தியாவின் ஆளுங்கட்சி குறித்த சிறந்த புத்தகங்களுள் ஒன்றாகும்.

Author: பிரசாந்த் ஜா

Translator: சசிகலா பாபு

Genre: இந்திய அரசியல்

Language: தமிழ்

Type: Paperback

Additional information

Weight 0.250 kg