முகலாயர்கள் – முகில்

640

Add to Wishlist
Add to Wishlist

Description

முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம். உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள். பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்! நமது இன்றைய மதச்சார்பின்மை, அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே. இன்னும் சொல்லலாம். முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி, நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம். இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை. ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கம் தோன்றி, வலுப்பெற்று, எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு. கடுமையான ஆராய்ச்சி, துல்லியமான விவரங்கள், விறுவிறுப்பான நடை. யூதர்கள், செங்கிஸ்கான், அகம் புறம் அந்தப்புரம் வரிசையில் முகிலின் அடுத்த முக்கியமான வரலாற்றுப் பதிவு இந்த நூல்.

Additional information

Weight0.25 kg