முல்லை பெரியாறு – ஊரோடி வீரகுமார்

70

Add to Wishlist
Add to Wishlist

Description

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை. முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்? அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன்? அணைபலவீனமாக உள்ளது; அதிகப்படியான நீரைத் தேக்கி வைத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் கேரள அரசின் வாதம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது?யார் சொல்வது சரி? இந்தப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு? வெறும் சுண்ணாம்புக் கற்களையும் சிமெண்டையும் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்புச்சுவர் அல்ல முல்லை பெரியாறு அணை. பல லட்சம் மக்களின் ஜிவ ஆதாரம் இது. தமிழகத்தின் இன்றைய மிக முக்கியப் பிரச்னையும் இதுவேதான். மாநில அரசுகள்,மத்திய அரசு, நீதிமன்றம் எதுவொன்றாலும் இந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.காரணம், அணைக்குப் பின்னால் உள்ள அரசியல். நீயா, நானா போட்டி. சுயநலம். இந்நூல், அணையின் வரலாறையும் பிரச்னையின் வரலாறையும் சேர்த்தே விவரிக்கிறது.

Additional information

Weight0.25 kg