இலங்கை முஸ்லிம் களின் பூர்வீகத்தை கொச்சைப் படுத்தினர். முஸ்லிம்களுக்கு இந் நாட்டில் உரிமையில்லை என நிரூபிப்பதற்காக அவர்களை ‘கள்ளத் தோணிகள்’ என்றும் “மரக்கல மினிசுகள்’ (மரக்கலத்தில் வந்தோர்) என்றும் கேவலப்படுத்தி வந்தனர். மறுபுறம், 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் சார்பில் சட்டசபை பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு, அரசியல் அதிகாரங்களை அனுபவித்த தமிழ்த் தலைமை இந்த அதிகாரங்கள் தொடர்ந்தும் தமது பிடிக்குள் வைத்திருக்கும் நோக்குடன் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களும் தமிழர்களே என வகைப்படுத்த முயன்றனர். சிங்கள, தமிழ் தலைமைகளின் இத்தகைய முயற்சி களுக்கு எதிராக அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக செயற் பட்டனர்.
இவர்கள் தமது சந்ததியை மதிப்பிடுவதில் ஆண்வழித் தொடர்பிற்கு முதன்மையளித்து தாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் குடியேறிய செல்வமும், வீரமும் மிக்க அரேபியர்களின் ஆண்வழித் தோற்றல்கள் எனவும், தாம் இந்நாட்டிற்கு ஆக்கிரமிப்பாளர்களாக வரவில்லை எனவும், மாறாக இந் நாட்டின் வளர்ச்சிக்கு பொருளா தாரம், மருத்துவம், கலாசாரம். என பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர்களெனவும், இந்நாட்டின் சிறப்புகளை பிற நாடுகளுக்கும் பரப்பியவர்கள் எனவும், பலவாறாக தமது முக்கியத் துவத்தை வெளிப்படுத்தினர். தென்னிந்திய மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கட்கு எதிராக தாம் தனித்தும், சிங்கள மன்னர் களுடன் தோள் கொடுத்தும் போராடியவர்கள் என்ற தமது வீரவர லாற்றை எடுத்துக் கூறினார்கள்.
இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அடக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் சமத்துவ அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களாகவும் நீண்ட காலமாய் நடாத்தப்பட்டு வருகின்றனர். சுதந்திரத்தின் பின்னான அரை தசாப்த காலங்களில் – தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் நீதி வழங்கப்படவில்லை. அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்ட அடக்கிவைக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் இலங்கை தேசத்துடன் இணைந்து கொள்ள எடுத்த அனைத்து எத்தனங்களையும் தென்னிலங்கை பெளத்த சிங்கள இனவாத சக்திகள் முறியடித்த நிலையில், சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒருபோதும் நியாயமான நீதி வழங்கப்படப் போவதில்லை என்பதை அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களும் இன்று உணர்ந்துநிற்கின்றனர். அந்த உண்மையின் விளைவாக கடந்த இரண்டு தசாய்த காலமாக தமிழ் மக்கள் ஆயுத வழிப்போராட்டத்தில் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள நடாத்தும் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்கள் இன்னும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சலுகைகளுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்றை கட்டியெழுப்ப முன்வராது துரதிருஷ்டமே. முஸ்லிம்கள் தங்களுக்கென்ற அரசியல் பலத்தை தனித்துவத்தோடு அடையாளப்படுத்தக் கூடிய வடக்குகிழக்கு முஸ்லிம்களை பொறுத்த வரையில், கடந்த கால அனுபவங்களின் ஊடே அவர்கள் சந்தித்த சவால்கள், விளைவுகள், அனுபவங்கள் காரணமாய் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தனித்துவ தேசத்தை கோர வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.