விசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் – பேராசிரியர் பு.ச.அரங்கநாதன்

90

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

முதலாம் அரிஅரன் (1336 – 56)

சங்கம குமாரரான அரிஅரன் 1336ஆம் ஆண்டு விசயநகர அரசராக முடிசூட்டிக் கொள்ளும்போது அவரது ஆட்சி தென்கிழக்கில் நெல்லூர் முதல் மேற்கில் தார்வார் வரையிலும், வடக்கில் பாதாமி வரையிலும் பரவியிருந்தது. எனினும் மூன்றாம் வல்லாளர், கர்நாடக நாட்டெல்லை அரிஅரன் ஆட்சி எல்லைக்குத் தெற்கிலும் மேற்கிலும் பரவியிருந்ததால் அவர் பொறாமை எண்ணத்தோடு அச்சிற்றாசினை வெற்றி பெற விழைந்தார்.

பலமுறை தம் படைகளை அனுப்பியும் விசயநகர அரசை வீழ்த்த முடியவில்லை. ஏனெனில் மூன்றாம் வல்லாளர் ஏற்கெனவே தமிழ்நாட்டில் படையெடுத்து இருந்ததாலும், மதுரைச் சுல்தானுடன் ஏற்பட்ட தகராறு களாலும், விசயநகர அரசினை அழிக்கும் நோக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த இயலவில்லை.

இதற்கிடையில், முதலாம் அரிஅரன், தம் நாட்டிற்குத் தக்க பாதுகாப்புச் செயல்களில் ஈடுபடலானார். கோட்டை கொத்தளங்களையே, தற்காப்பாக நினைத்த காலமானதால் அவர் விசயநகரக் கோட்டை சுட்டியதோடு நில்லாமல் தேவகிரியிலிருந்து சுல்தான்கள் படையெடுப்பைச் சமாளிக்க வாதாபிக் கோட்டையைப் பலப்படுத்தினார். வலிமை பொருந்திய படை ஒன்றினைத் திறமையுள்ள தளகர்த்தர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.

தம் ஆட்சியின் கிழக்குப் பகுதிக்கு
நெல்லூர் மாவட்டத்திலுள்ள உதயகிரியைத் தலைநகராக்கிச் சிறந்த கோட்டையை அமைத்துத் தம் தம்பியான கம்பணனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். மூன்றாம் வல்லாளரின் நடவடிக்கையைக் கவனிக்கும் பொருட்டு இளவரசரான. மற்றொரு தம்பியான முதலாம் புக்கனிடம் மேற்குப் பகுதியை ஒப்படைத்து அனந்தப்பூர் மாவட்டத்தினுள் குத்திக் கோட்டையை வலுப்படுத்தினார். இவ்வாறு விசயநகரப் பேராசின் எல்லைப் புறப் பாதுகாப்பினைச் செய்தபின், நிர்வாகத் துறையில் தம் கவனத்தைத் திருப்பினார்.

நாட்டின் வளப்பத்தைப் பெருக்க. காட்டினை அழித்துப் பயிரிடும் நிலங்களாக மாற்றிக் கொள்ள குறைந்த குத்தகைக்கு வேண்டுவோருக்கு வழங்கினார். தம் நாட்டினைப் பல தலங்களாகவும், நாடுகளாகவும் பிரித்து, அவற்றில் வரிவசூல் செய்யவும், உள்ளூர் ஆட்சிப் பொறுப்பினைக் கவனிக்கவும் அரசாங்க அலுவலர்களை நியமித்தார்.

இதற்கிடையில் மதுரைச் சுல்தானோடு போரிட்டுச் சூழ்ச்சியால் மூன்றாம் வல்லாளர் கொல்லப்பட்டார். அதற்குப்பின் ஹொய்சள அரசர் நான்காம் வல்லாளர் விசயநகரப் படைக்கு ஆற்றாது தோற்றோடினார். எனினும், அந்நாட்டு முக்கியத் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்க்க முற்பட்டனர். எனினும், 1346-ல் புக்கன் அவர்களையெல்லாம் அடக்கித் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தார். அவ்வெற்றிக்கு அறிகுறியாகச் சிருங்கேரி யில் வித்யாதீர்த்தர் தலைமையில் 1346-ல் மிகச் சிறப்பாக விழா வொன்றினை நடத்தினார்.
அரிஅரனைப் பற்றி 1356-க்குப் பின் ஏதும் செய்தி கிடைக்காததால், அவர் அவ்வாண்டே இறந்திருக்கக் கூடுமென கருதுகின்றனர்.

Weight0.25 kg