விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள்

160

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இலக்கியம், அரசியல், பொதுவாழ்வு என கடந்த நாற்பது ஆண்டுகளாக தீவிரமாக இயங்கி வருபவர் கவிஞர் பரதன்.

இவரது தந்தை சோமநாதன் அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர். எனவே, தேசியம் இவரது உயிரில் கலந்த உணர்வாக மிளிர்வதோட இவரது படைப்புகளிலும் பரிணமிக்கிறது.

இதுவரை 12 நூல்களைத் தந்துள்ள கவிஞர் 10க்கும் மேற்பட்ட விருதுகளைத் தனது நூல்களுக்காகவும் மேடை உலகப் பங்களிப்புக்காகவும் பெற்றுள்ளார். பட்டிமன்றம், கவியரங்களம், இலக்கியப் பொழிவு என நூற்றுக்கணக்கான மேடைகளைக் கண்டவர்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பின்புலத்தில் விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற இந்நூலை ஆதாரத்துடன் தந்துள்ளார். இந்திய முஸ்லிம்கள் மீதான எதிர்வினைகளும் தவறான புரிதல்களும் மிகைத்து வரும் இச்சூழலில், சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை உரக்கச் சொல்கிறது இந்நூல்.

Weight 0.4 kg